புதன்கிழமை, நவம்பர் 13, 2024

கட்டத்துரைக்கு கட்டமே சரியில்ல.. நாலா பக்கமும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு போடப்பட்ட கேட்

Dhruva nakshatram movie release problem:”பட்ட காலிலே படும்,கெட்ட குடியே கெடும்.” என்ற வாறு துருவ நட்சத்திரத்திற்கு வந்த சோதனைகள் ஒன்று இரண்டு அல்ல. 2017 இல் தொடங்கப்பட்ட துருவநட்சத்திரம் இன்று வரை திரைக்கு வராமல் படாத பாடுபடுகிறது.

கௌதம் வாசுதே மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ்,பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் துருவ நட்சத்திரம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. துருவ நட்சத்திரம் நவம்பர் 24 வெளியாக போவதாக தகவல்கள்  கசிந்த வண்ணம் இருந்தன.

கௌதம் 2018 இல் சிம்புவை வைத்து படம் இயக்குவதாக “ஆல் இன் பிக்சர்ஸ்” நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 2 கோடி 40 லட்சம் முன்பணம் வாங்கியதாகவும்  இதுவரை படம் எடுக்காத நிலையில் முன் பணத்தை திருப்பித் தராத வரை துருவ நட்சத்திரத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கி உள்ளது.

Also Read:கௌதம் மேனனுக்கு மீண்டும் கால்ஷிட் கொடுத்த விக்ரம்.. இந்த வாட்டியாது மிஸ் பண்ணாம பாத்துக்கோங்க

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கௌதம் பல வழிகளிலும் நிதி திரட்டி துருவ நட்சத்திரத்தை இன்று வெளியிட  ஆர்வம் காட்டினார். படத்தின் ஹீரோ விக்ரமோ இதனைக் கண்டுக்காமல் அவர் வேலையை பார்த்து வருகிறார் என்று புலம்பினார். ஆனால் யாரும் பணம் தந்து உதவ முடியாத சூழ்நிலையில் இன்று வெளிவர இருந்த இப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன்   ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டும், விரைவில் திரும்ப வருவோம் என வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்

கௌதமின் விரோதிகள் சிலரோ ஏற்கனவே இவருக்கு  இப்படத்தின் மூலம் 80 கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும் இப்படம் வெளியிடப்படாததால் கௌதமின் கேரியரே முடிந்து விட்டது என்பது போலவும் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.  தடைகளை தகர்த்தெறிந்து  வெற்றி நடை போடுவாரா கௌதம்! என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Also Read:விடிய விடிய நடந்த பஞ்சாயத்து.. தள்ளிப்போன துருவ நட்சத்திரம் ரிலீஸ்

- Advertisement -spot_img

Trending News