Connect with us
Cinemapettai

Cinemapettai

rajinikanth ks ravikumar

Entertainment | பொழுதுபோக்கு

படையப்பா படத்தில் நடிக்க சிவாஜி போட்ட கண்டிஷன்.. அசால்டா கூல் பண்ணிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள திரைப்படம் தான் படையப்பா, முத்து, பாட்ஷா போன்ற ரஜினிகாந்த் படங்கள்..

என்னதான் ரஜினிகாந்த் படையப்பா படத்தில் நடித்திருந்தாலும் அந்த படத்தின் திரைக்கதை, ஸ்டைல் எல்லாம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் தான் படம் வேற லெவலில் ஓடியது. படையப்பா படத்தில் ரஜினியின் அப்பாவாக முதலில் நடிப்பதற்கு பல நடிகர்கள் தேர்வாகியுள்ளனர்.

அதில், ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக, நண்பனாக நடித்த விஜயகுமார் தேர்வாகியுள்ளார். ஆனால் விஜயகுமார் மற்றும் ரஜினி இவர்கள் இருவரும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி விட்டதால் மீண்டும் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டனர்.

பின்பு ரஜினியின் அப்பாவாக நடிக்க ஏதாவது ஒரு நடிகரை நடிக்க வைக்க வேண்டுமென கேஎஸ் ரவிக்குமார் முடிவு செய்துள்ளார். பின்பு கடைசியாகத்தான் சிவாஜி கணேசனை நடிக்க வைக்கலாம் என கே எஸ் ரவிக்குமார் முடிவு செய்து ரஜினியிடம் சம்மதம் பெற்றார்.

rajinikanth shivaji

rajinikanth shivaji

ஆனால் சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிப்பதற்கு ஒரு பெரும் தொகையை லம்பாக கேட்டுள்ளார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த கே எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் சிவாஜியின் சம்பள விஷயத்தை கூறியுள்ளார்.

அதற்கு ரஜினிகாந்த் சற்றும் யோசிக்காமல் சிவாஜி அவர்கள் கேட்ட பணத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் பணத்தின் முழு தொகையையும் கொடுத்து விடுங்க என கூறியுள்ளார்.

படமும் வெளிவந்தது சக்கை போடு போட்டது. அதில் சிவாஜி கணேசன் செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார்.

Continue Reading
To Top