ரஜினிகாந்த் என்னும் பந்தயக் குதிரை.. சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுக் கொடுத்த முதல் படம்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் தொடர்ந்து பல சிறப்புக் கட்டுரைகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் சில நடிகர்களைப் பற்றிய சுவாரசியமான கட்டுரைகளை நாம் காணவிருக்கிறோம். முதலில் நாம் காண இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பற்றி.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் எப்போதும் நம்பி பணம் கட்டும் ஒரு பந்தயக் குதிரை ரஜினிகாந்த் என்றால் அது மிகையல்ல. அவரது பெரும்பான்மையான திரைப்படங்கள் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அவரை நம்பி பணம் போட்ட பலர் இன்று பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி ஆக இருக்கிறார்கள் என்பது அனைவரும் ஏற்க வேண்டிய உண்மை.

இத்தகைய நிலையை அவர் எளிதில் பெற்று விடவில்லை அதற்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழக மக்கள் அவர் மீது பெரும் அன்பு கொண்டிருந்தனர். ஒரு பக்கம் அதிகம் மெனக்கெட்டு திரைப்படங்களை உருவாக்கி கொண்டிருந்த கமலால் பிடிக்க முடியாத இடத்தை ரஜினிகாந்த் அவர்கள் சாதாரண ஸ்டாலினால் ஈசியாக பிடித்து விட்டார். அந்த அளவுக்கு எளிதில் விளக்க முடியாத ஒரு பிணைப்பு ரஜினிகாந்துக்கும் தமிழக மக்களுக்கும் உண்டு.

ரஜினிகாந்த் அவர்கள் மராத்திய மொழியை பூர்வீகமாக கொண்ட ஒரு கர்நாடக குடும்பத்தில் பிறந்தவர். சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்டிருந்த அவர் சிறு வயது முதலே நடிப்புத்துறையில் செல்ல வேண்டும் என்ற நாதம் கொண்டிருந்தவர். பலர் கூறுவது போல பஸ் கண்டக்டர் ஆகவே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் அப்போது அவரை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் கண்டு அடையாளப்படுத்தினார் என்பது முற்றிலும் உண்மை அல்ல. ரஜினிகாந்த் அவர்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்காக நடிப்பு பயின்றவர்.

குடும்ப வறுமையின் காரணமாகவும் பணத்திற்கான தேவைக்காகவும் அவர் சில காலம் பஸ் கண்டக்டராக வேலை செய்தார் என்பது உண்மை. மெட்ராஸ் திரைப்பட கல்லூரியில் அவர் 1973ஆம் ஆண்டு நடிப்பு பயிற்சி பெற்றார் என்பதே உண்மை. அதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய நண்பர் ராஜ்பகதூர்.

முதல் படத்திலேயே அவருக்கு இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீவித்யா அவர்களின் கணவராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு கேன்சர் நோயாளி வேடம். மூடியிருக்கும் கேட்டைத் திறந்து அறிமுகமாகும் ரஜினிகாந்த் திரைத்துறையில் தான் வந்துவிட்டதை அப்போதே தெரிவித்திருந்தது போல அமைந்தது அவரது அறிமுக காட்சி.

முதல் படத்திலேயே நல்ல கவனம் பெற்ற ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து கே பாலசந்தர் அவர்களின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக இருந்தார். இதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்துக் கொண்டே வந்தது. ஆரம்பத்தில் துணைக் கதாபாத்திரம், வில்லன் ஆகிய வேடங்களே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. புவனா ஒரு கேள்விக்குறி என்னும் திரைப்படத்தில் ரஜினி காந்தும் விஜயகுமாரும் ஒன்றாக நடித்தனர். அந்தத் திரைப்படத்தில் முதல்பாதியில் ரஜினிகாந்த் வில்லனாக தோன்றி பின்னர் மனம் திருந்தி ஹீரோ மாறிவிடுவார். அந்தப் படம் முதல் அவருக்கு தொடர்ச்சியாக கதாநாயகன் வேடம் கிடைக்க ஆரம்பித்தது.

அவரது முதல் கதாநாயக திரைப்படமான புவனா ஒரு கேள்விக்குறி படத்தை இயக்கி இருந்த எஸ்பி முத்துராமன் அவர்கள் அவருக்கு மீண்டும் ஒரு நல்லதொரு வாய்ப்பை வழங்கினார். இந்தமுறை ஆறிலிருந்து அறுபது வரை என்கிற திரைப்படத்தில் அவருக்கு நல்லதொரு வாழ்க்கைப்பாடம் கொண்ட கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த போதும் இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பெயரில் பல திரைப்படங்களில் துணை பாத்திரங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடித்து வந்த ஒரு முக்கியமான திரைப்படம் தான் நினைத்தாலே இனிக்கும்.

இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகன் நடித்திருந்தார். அதில் நகைச்சுவை பாத்திரத்தை ஏற்றிருந்தார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயால் பிடிக்கும் ஸ்டைலை அரங்கேற்றி காட்டினார். இந்த ஸ்டைல் தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன் பிறகு தொடர்ந்து இந்த ஸ்டைலில் பல திரைப்படங்களில் அவர் உபயோகிக்க ஆரம்பித்தார்.

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகும் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 1980 ஆம் வருடம் வெளிவந்த பில்லா திரைப்படத்தில் நெகட்டிவ் ஹீரோ ஒரு ரோலில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் தங்கையை கற்பழித்த கொன்றவர்களை பழி வாங்கும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதைப்போல மூன்று முகம் திரைப்படத்தில் 3 கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்டிய அருமையாக நடித்திருந்தார். அதற்கு இடம் பெற்ற அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்களால் மறக்க இயலாது. நெற்றிக்கண் திரைப்படத்தில் அவர் வயதான பெண் பித்தராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இயக்குனர் பாஸ்கர் அவர்கள் இயக்கிய பைரவி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை அவர் அளித்தார். இப்படி பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வந்த ரஜினிகாந்த் முரட்டுக்காளை திரைப்படம் மூலமாக பி மற்றும் சி சென்டர்களில் என்று கூறப்படும் கிராமங்களுக்கும் சென்று சேர்ந்தார்.

இந்த திரைப்படத்தில் காளையன் அவர் சிறப்பாக நடித்திருந்தார். வில்லனாக தமிழக ஜேம்ஸ்பாண்ட் என்று அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருந்தார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் வணிகரீதியான நடிகராக மாறினார். ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நிலையை அடைந்தார்.

ரஜினிகாந்த் அவர்களின் ஆஸ்தான இயக்குனராக எஸ்பி முத்துராமன் அவர்கள் உருவெடுத்தார். இருவரும் ஒன்று சேர்ந்து ஏவிஎம் பிராக்சன் நிறுவனத்திற்காக பல திரைப்படங்களை உருவாக்கினார்கள். அவற்றுள் பெரும்பாலானவை மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. ரஜினிகாந்த் தொடர்ந்துதான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக வளர்ந்து வந்த இயக்குனர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்தார். அதில் முக்கியமானவர்கள் ஆர் வி உதயகுமார் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா. இவர்கள் இயக்கிய அண்ணாமலை பாட்ஷா எஜமான் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன.

ரஜினிகாந்த் எப்பொழுதும் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்தார் என்பதற்கு அவரது திருமணமும் ஒரு சிறந்த உதாரணமாகும். வைத்தி மகேந்திரன் அவர்களின் மனைவியின் சகோதரியான லதாவை கண்டதும் அவர் மீது காதல் கொண்டார். அவரிடம் நேரடியாக தன் மனதில் உள்ளதை கொட்டி காதலை வெளிப்படுத்தி சம்மதம் வாங்கினார். லதா 1pu ரஜினிகாந்தின் தீவிர ரசிகை எல்லாம் கிடையாது ஆனபோதும் அவருடைய நேர்மை அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது பின்பு அவர் குறிப்பிட்டிருந்தார். நல்லதா ஒரு சில திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.

1995 ஆம் ஆண்டில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரகுவரன் நக்மா ஜனகராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா அவர்கள் இசையமைத்திருந்தார். பாஷா திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுகவிற்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அடுத்து வந்த பல திரைப்படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக் வைப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டார்.

பாட்ஷா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்தின் வாழ்க்கை சற்று வேறு வடிவம் பெற்றது. அவர் செய்யும் எந்த ஒரு சாதாரண காரியமும் கூட ரசிகர்களாலும் அரசியல்வாதிகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. தேர்தல் வரும்போதெல்லாம் அவர் யாருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுப்பார் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது. அந்த வகையில் அவர் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை முடிவு செய்யும் சக்தியாகவும் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஆனபோதும் அவரது ரசிகர்களின் விருப்பம் அவர் தனியாக கட்சி தொடங்க வேண்டும் என்பதும் அவரே அவர்களது முதல்வராக வரவேண்டும் என்பதுமே.

2002ம் வருடம் ரஜினிகாந்த் அவர்கள் சொந்தமாக பாபா என்ற திரைப்படத்தை தயாரித்தார். அவர் அடிக்கடி இமயமலை பயணப்படும் பாபாவின் குறியீடுகள் சிலவற்றை புகுத்தி திரைக்கதை அமைத்திருந்தார். அந்தப் படம் சரியாகப் போகாத காரணத்தால் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதேபோல அந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் அவர் சுருட்டு பிடிக்கும் வகையில் இருந்த காரணத்தால் பாமக கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அவருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இருவரும் பேட்டிகளின் மூலமாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் என்னும் பெயரால் தமிழக இளைஞர்களை புகைப்பதற்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. அதன் காரணமாக ரஜினிகாந்த் அவர்கள் இனிமேல் திரைப்படங்களை புகைப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார்.

ரஜினிகாந்த் அவர்களை அரசியல் ரீதியாக பலர் விமர்சித்த போதும் அவரது திரைப்படங்கள் தொடர்ந்து மாபெரும் வெற்றிகளை சுவைத்துக் கொண்டிருந்தன. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த முத்து படையப்பா ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பையும் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்து தயாரிப்பாளர்களை திருப்திபடுத்தியது. ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த சிவாஜி எந்திரன் போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவுக்கு புது அனுபவத்தை கொடுத்தது.

திரைப்படங்களில் மட்டும் அவர் செய்யும் மாயாஜாலம் போதாது என்று அவரது ரசிகர்கள் அவரை எப்போதும் கட்சி ஆரம்பிக்குமாறு அழைத்துக் கொண்டிருந்தனர். ரஜினிகாந்த் அவர்களும் ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது உட்கட்சி நிர்வாகிகளை கட்டமைக்கும் வேலையிலும் அவர் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். ஆனபோதும் அவர் கட்சி உருவாக்க முன்பே அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். இது அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதற்கு என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியாதபோதும் அப்போது கொரோன வைரஸ் உச்சத்தில் இருந்த காரணத்தால் கூட்டங்களை கூட்டி அது பரவ விடாமல் செய்ய வேண்டும் என்பதே எனது முதல் கடமை என்று அவரது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது நண்பரான நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து பட்ட அவலங்களையும் கண்டு அதில் இருந்து பாடம் கற்று இருக்கவும் கூடும் என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர். சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆனார் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட இயலாமல் போனது அனைவருக்கும் வருத்தமே.

ரஜினிகாந்த் அவர்களின் இந்த மாபெரும் வளர்ச்சியை வெறும் அதிர்ஷ்டம் என்று சொல்லி கடந்து சென்றுவிட முடியாது. தன்னை விட அறிவிலும் ஆற்றலிலும் அறிவிலும் போட்டியாளரான கமல்ஹாசன் அவர்களை பின்னுக்குத் தள்ளி வணிகரீதியான திரைப்படங்களின் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ரஜினிகாந்த். இத்தனை பெரிய வெற்றியைப் பெற்ற பின்னும் அவர் சாதாரணமாகவே இருந்தார். தன் சக போட்டியாளராக கமல்ஹாசன் மீது எப்போதும் நட்புடனும் அதேபோல மற்ற நடிகர்களுடனும் பழகி வந்தார் என்பது அவர் ஆயிரத்தில் ஒருவர் என்பதை நிரூபிக்கிறது.

ரஜினிகாந்தின் வாழ்க்கை என்பது முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகத்தை கொடுக்கும். அவன் நிலை உயரும் போதும் தன்மையுடன் பழக வேண்டும் என்பதனையும் கற்றுக் கொடுக்கும். சூப்பர் ஸ்டார் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தான் அவர் அரசியல் கட்சி தொடங்கினாலும், இல்லாவிட்டாலும்!

Next Story

- Advertisement -