Connect with us
Cinemapettai

Cinemapettai

மகளுக்கு கல்யாணமா? நீங்களே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம். ரசிகர்கள் கிண்டல்.

Rahman1-Cinemapettai.jpg

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மகளுக்கு கல்யாணமா? நீங்களே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம். ரசிகர்கள் கிண்டல்.

தமிழில் 80களில் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்தவர் ரகுமான். இன்றுவரை அவருக்ககென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. “ நிலவே மலரே” என்ற படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார. அதன்பின் புது புது அர்த்தங்கள், சங்கமம், கல்கி, புரியாத புதிர், போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

அந்த காலத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் ரகுமானை தான் நடிக்க அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ணியுள்ளார. இவர் நடிப்பு மட்டுமின்றி நன்றாக டான்ஸ் ஆடக்கூடியவர். இவர் நடித்த சங்கமம் படம் நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ரகுமான் தற்போது மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்”, ஜெயம் ரவியுடன் “ஜனகனமன” விஷாலுடன் “துப்பறிவாளன் 2” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் மனைவியும், நடிகர் ரகுமானின் மனைவியும் சகோதரிகள். இவர்கள் இருவரும் சகல முறை ஆவார்கள். இந்நிலையில் நடிகர் ரகுமானின் மூத்த மகளான ருஷ்டா ரகுமானிற்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

Rahman1-Cinemapettai-1.jpg

Rahman1-Cinemapettai-1.jpg

ரகுமானின் மகள் கல்யாணத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தற்போதும் நடிகர் ரகுமான் பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கிறார். அவருக்கு கல்யாணம் செய்யும் வயதில் மகள் இருக்கிறாரா? அவரே இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top