சாகும் வரை ரகுவரனுக்கு நிறைவேறாத ஆசை.. கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த சோகம்

நடிகர் கமல்ஹாசனின் திரை வரலாற்றில் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த பல படங்கள் உள்ளன. அதில் முதலிடத்தில் மணிரத்னம் இயக்கிய “நாயகன்” படம் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த படத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும், கட்டுக்கதைகளும் தற்போது வரை வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

நாயகன் படத்தில் கமல் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் நடிகர் சத்யராஜ் அவர்கள். இப்படி ஒரு கதாபாத்திரம் இயக்குனர் மணிரத்னத்திடம் இருப்பதை அறிந்த கமல்ஹாசன் அந்த கதாபாத்திரத்தை லாவகமாக தன்வசப்படுத்திக் கொண்டார். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்து வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் குணச்சித்திர நடிகர் ஜனகராஜ் அவர்கள். அதற்கு அடுத்தபடியாக ஒரு வலுவான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்காக நீண்ட நாட்களாக மணிரத்தினத்தின் தேடல் இருந்தது.

Also Read: 5 பேருக்கு எப்பொழுதுமே சிபாரிசு செய்யும் கமல்.. உலகநாயகன் படத்தை பெரும்பாலும் மிஸ் செய்யாத நடிகர்கள்

அந்த சூழலில் அவருக்கு முதலில் தோன்றிய ஒரு நடிகர் மறைந்த ரகுவரன் அவர்கள். இன்றும் தமிழ் திரையுலகில் நடிப்பு புலிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இன்று வரை தயிர் சாதம் மட்டுமே வாய்க்கப் பெற்றிருக்கிறது. இந்த புலிகளின் வரிசையில் திரு.ரகுவரன் ஒரு ஆகப்பெரிய நடிப்பு சாம்ராட். இவரின் புரியாத புதிர் படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்றே போதும் இவரது நடிப்பை பறைசாற்ற.

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் திரு ரகுவரனை நாயகன் படத்தில், நடிகர் நாசர் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்காக அணுகினார். ஆகச்சிறந்த ஒரு வாய்ப்பை தன்னால் ஏற்க இயலாத சூழ்நிலையில் அப்போது நடிகர் ரகுவரன் இருந்தார். 1987- ல் நாயகன் திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வருடத்தில் மட்டும் ரகுவரன் அவர்கள் நடித்த படம் மட்டும் பன்னிரண்ட. அவருடன் நடிப்பது வாழ்நாள் கனவாக இருந்தது அது சாகும்வரை நிறைவேறாமலேயே போய்விட்டது.

Also Read: இயக்குனராக வெற்றி கண்ட உலகநாயகன்.. சினிமாவை கத்துக்க மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 படங்கள்

நடிகர் ரகுவரனால் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருந்தார். இன்றும் திரைத்துறையில் அவரது இடத்தை எட்ட எந்த ஒரு நடிகராலும் இயலவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு மிக சிரத்தை எடுத்து தன் சொந்த வாழ்விலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து பயிற்சி எடுப்பவர்.

இவரது மனைவி ரோகினி ஒரு பேட்டியில், தனக்கு திருமணமான புதிதில் ரகுவரன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார். இதை ரகுவரனின் தாயாரிடம் கூறியபொழுது , அவர் ரகுவரன் தற்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு ரோகினி இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் “அபிமன்யு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரம் மிக ஆக்ரோஷமான ஒரு வில்லன் கதாபாத்திரம். இதை அறிந்த பின்னரே ரகுவரன் அவர்களின் மனைவிக்கு இவர் ஒரு கதாப்பாத்திரத்திற்கு எந்த அளவிற்கு வீட்டில் பயிற்சி செய்கிறார் என்று புரிந்தது.

Also Read: ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

இம்மாதிரியான நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பே!

Next Story

- Advertisement -