நம்ப வைத்து காலை வாரிவிட்ட விமல்.. படத்தின் பெயருக்கேற்ப போட்ட பெரிய நாமம்

களவாணி என்ற கிராமத்து கதை அம்சம் கொண்ட படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் விமல். இதை தொடர்ந்து இவர் நடித்த கலகலப்பு, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா போன்ற படங்கள் ஓரளவு வெற்றியை தந்தது. அதன்பிறகு இவர் நடித்த எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

மேலும் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் படங்கள் ஓரளவு ஹிட் ஆனாலும் தனியாக ஒரு சிறந்த நடிகர் என நிரூபிக்க முடியாமல் விமல் போராடி வருகிறார். இந்நிலையில் விமல் மீது மோசடி புகார் ஒன்று பதிவாகியுள்ளது. இவருக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்த படம் களவாணி.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கூறி சிங்காரவேலன் என்பவரிடம் 1.5 கோடி விமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மெரினா பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை விநியோகம் செய்துவருபவர் சிங்காரவேலன். இவர் ரஜினியின் லிங்கா, விஜய் சேதுபதியின் புறம்போக்கு போன்ற சில படங்களை விநியோகம் செய்துள்ளார்.

விமலிடம் 1.5 கோடியை பறிகொடுத்த சிங்காரவேலன் போலீஸில் வழக்கு கொடுத்துள்ளார். அதில் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ரிலீஸ்க்கும் முன்னரே திருப்பித் தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு விமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறார், அந்தப் படமும் எடுத்த பாடில்லை என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிங்காரவேலன் தமிழகத் திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் புகார் செய்தார். இரண்டரை ஆண்டுகள் கடந்தும் விமல் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஒன்றரை கோடியுடன் வட்டியும் திருப்பிக் கொடுக்குமாறு விமலுக்கு திரைப்பட தயாரிப்பு சங்கம் கூறியுள்ளது.

இந்நிலையில் விமல் 2.70 கோடிக்கான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் அதிலும் தன்னுடைய களவாணி தனத்தை பயன்படுத்தியுள்ளார் விமல். அந்த காசோலையை வங்கியில் செலுத்தும் போது விமலின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆகிவிட்டது. களவாணி என்ற படத்தின் பெயரைக் பார்த்தாவது யோசித்திருக்க வேண்டும் விநியோகஸ்தரே என பலரும் சிங்காரவேலனை விமர்சித்து வருகிறார்கள்.

Next Story

- Advertisement -