என்ன கொடுமை சார் இது.. நடிகையிடம் ஜொள்ளுவிட்டு அசிங்கப்பட்ட பிரேம்ஜி

கங்கை அமரனின் இரண்டாவது மகனும் நடிகருமானவர் பிரேம்ஜி அமரன். நடிகர் மட்டுமல்லாது இசையமைப்பாளர், பாடகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர். 42 வயதாகும் இவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு பெண் பார்த்து வருகிறோம் விரைவில் திருமணம் நடக்கும் என இவரது அண்ணன் வெங்கட்பிரபு கூறி வருகிறார். ட்விட்டரில் எந்த நடிகை தன் புகைப்படத்தை வெளியிட்டாலும் உடனே வாய் பிளந்து பார்க்கும் ஒரு GIF வீடியோவை கமெண்ட் பாக்ஸில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரேம்ஜி.

அந்தவகையில் ஓணம் பண்டிகையையொட்டி நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சேலை அணிந்திருக்கிறார். தான் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த பிரேம்ஜி அமரனோ, வாயை பிளந்து பார்ப்பதுபோன்ற ஒரு எமோஜியை கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு கமெண்ட் செய்த கல்யாணி ப்ரியதர்ஷன், இது எதிர்பார்த்த கமெண்ட்தான் என கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்திலும், புத்தம்புது காலை என்ற படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

kalyani priyadarshan
kalyani priyadarshan

பிரேம்ஜியை பார்ப்பவர்கள் எல்லோரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறுகிறார்கள். சமீபத்தில் கூட, குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் தான் திருமணம் என்று நடிகை ஆர்த்தி காமெடியாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வெங்கட்பிரபு படத்தில் நடித்துவரும் இவர் தற்போது மாநாடு படத்திலும் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் இவருக்கு கல்யாணம்தான் என்ற பேச்சும் அடிபடுகிறது.