புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

60 படங்களில் நடித்தும் பிரோஜனம் இல்லை.. இந்த 6 படங்களை மட்டுமே ஹிட் கொடுத்த பிரபுதேவா!

பிரபுதேவா என்று சொன்னதுமே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது அவருடைய டான்ஸ். இவருடைய நடனத்துக்கு ஈடாக யாராலும் ஆட முடியாது என்று பெயரை வாங்கி இருக்கிறார். அத்துடன் இவர் 60 படங்களிலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் அப்படி நடித்திருந்தும் இவரால் பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.  இதற்கு காரணம் வெறும் ஆறு படங்கள் மட்டுமே இவருக்கு ஹீட் கொடுத்து இருக்கிறது.

காதலன்: எஸ்.சங்கர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு காதலன் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபுதேவா, நக்மா, எஸ்பிபி, வடிவேலு, ரகுவரன் மற்றும் மனோரமா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் கதையானது ஒரு ஆளுநரின் மகளை காதலிக்கும் கல்லூரி மாணவனின் காதல் பல எதிர்ப்புகளை சமாளித்து இவர்கள் காதலில் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் இப்படத்தில் வடிவேலு செய்யும் காமெடி மிகவும் எதார்த்தமாக அமைந்திருக்கும். இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

Also read: பிரபுதேவா தாடிக்கு நயன்தாரா காரணம் இல்லையாம்.. வெளிப்படையாக அவரே சொன்ன 2 காரணம்

மின்சார கனவு: ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல், நாசர் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் கன்னியாஸ்திரி ஆக விரும்பும் கஜோலை அரவிந்த்சாமி விரும்புவதால் இதற்கு உதவி செய்யுமாறு பிரபுதேவாவிடம் கேட்கிறார். பின்பு இவர்களுடைய காதல் எப்படி யாருடன் நிறைவேறுகிறது என்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வணிகரீதியாக வெற்றி பெற்றது.

காதலா காதலா: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு காதலா காதலா திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் கமல் மற்றும் பிரபுதேவா வேறு வேறு வழிகளில் சம்பாதித்து, கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவுவது மற்றும் இவர்களுடைய காதலை எப்படி நிறைவேற்றி அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: தேவி 2 – சோத்துல வை சூனியத்தை, கோவைசரளா கலக்கல் காமெடி Sneak peek வீடியோ..!

நினைவிருக்கும் வரை: கே சுபாஷ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு நினைவிருக்கும் வரை திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபுதேவா, கீர்த்தி ரெட்டி, சுஜாதா, விவேக் மற்றும் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரபுதேவா, பணக்கார குடும்பத்தில் இருக்கும் பெண்ணை காதலிப்பதால் இவர்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடக்க இருக்கிறது என்பதை மையமாகக் எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

பெண்ணின் மனதை தொட்டு: எழில் இயக்கத்தில் 2000 ஆண்டு பெண்ணின் மனதை தொட்டு திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபுதேவா, ஜெயா சீல் கோஷ், விவேக், தாமு, ஐஸ்வர்யா மற்றும் மௌலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கெஸ்ட் ரோல் கேரக்டரில் சரத்குமார் நடித்திருப்பார். இதில் பிரபுதேவா, காதலிக்கும் பெண் இவரை தவறாக புரிந்து கொண்டு விலக நினைப்பார். பின்பு இவர் மேல் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்லி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தேவி: விஜய் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு தேவி திரைப்படம் வெளிவந்தது. இதில் தமன்னா, பிரபுதேவா, ஆர் ஜே பாலாஜி, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் பிரபுதேவா, தமன்னாவை கல்யாணம் செய்த பிறகு அவருடைய செய்கை எல்லாம் சற்றும் வித்தியாசமாக மாறுகிறது. இதற்கான காரணத்தை என்ன என்று கண்டுபிடிப்பதை கதையாக அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

Also read: வைரலாது பத்மஸ்ரீ பிரபுதேவாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொன்ன மகன்

- Advertisement -

Trending News