500 ரூபாய் சம்பளம் வாங்கிய பிரபுதேவா.. கொடுத்தது யார் தெரியுமா?

காதலை கவி நயத்தோடு சொன்னவர் இயக்குனர் மணிரத்னம். இவரது படங்களில்
அளவான பேச்சு, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி ஆகியவற்றை புதிய வடிவில் சினிமாவிற்கு கொண்டு வந்துள்ளார்.

அவ்வாறு மணிரத்னம் இயக்கி 1986 ல் வெளியான மௌனராகம் படத்தில் பிரபுதேவா ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். பிரபுதேவா சிறுவயது முதலே பரதநாட்டியம் பயிற்சி பெற்றவர். இதனால் பள்ளிப் பருவத்திலேயே அவருடைய தந்தை சுந்தரம் மாஸ்டருடன் சூட்டிங்க்கு போக ஆரம்பித்துவிட்டார். அப்படி ஒருமுறை ஊட்டிக்கு போகும்போதுதான் மௌனராகம் ஷூட்டிங் நடந்துள்ளது.

அப்போது மணிரத்னம், தோட்டா தரணி, பிவி ராம் மூவரும் பிரபுதேவாவை பரதநாட்டியம் ஆட சொல்லியுள்ளார்கள். பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து மூவரும் பாராட்டியுள்ளனர். இதனால் மௌன ராகம் படத்தில் ‘பனி விழும் இரவு நனைந்தது நிலவு’ என்ற பாடலில் பிரபுதேவா ஃபுளூட் வாசிக்கிற மாதிரி ஓரிரண்டு காட்சியில் நடிக்க மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பாடலின் நடனத்தை பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் தான் கோரியோ கிராஃப் செய்தாராம்.

மௌன ராகம் படத்தில் பிரபுதேவா நடிக்கும் பொழுது அவர் எட்டாவது தான் படித்துக் கொண்டிருந்தாராம். சூட்டிங் முடிந்த உடனே பிரபுதேவாவை அழைத்து இயக்குனர் மணிரத்னம் ஒரு கவர் கொடுத்தாராம். அதில் 500 ரூபாய் பணம் இருந்ததாம். மணிரத்னம் கையால் வாங்கியதுதான் பிரபுதேவாவின் முதல் சம்பளமாம்.

இந்தப் பாடலை அதிகாலையில் சூட்டிங் எடுத்ததால் குளிரால் பிரபுதேவாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாம். அதை தெரிந்த நடிகை ரேவதி பிரபுதேவாவுக்கும் மாத்திரை கொடுத்துவிட்டாராம். பிரபுதேவா பள்ளிக்கு சென்று படத்தில் டான்ஸ் ஆடியது, 500 ரூபாய் சம்பளம் வாங்கியது பற்றி பெரிதாக பேசாமல், ரேவதி மேடம் மாத்திரை கொடுத்ததை அவரது நண்பர்களிடம் பெரிதாக பேசினாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்