விஜய்யின் தளபதி 65 படத்தில் இணைந்த முரட்டு பிரபலம்.. இவர் கொஞ்சம் கொடூரமான ஆளாச்சே!

விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். மேலும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக சென்னையில் செட் அமைத்து ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

அதுமட்டுமில்லாமல் ஒரு பெரிய மால் செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தற்போது தயாரிக்கும் படங்களிலேயே தளபதி 65 படம் தான் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்ற ஒரு செய்தியும் கிடைத்துள்ளது.

மேலும் தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும் அபர்ணா தாஸ் போன்றோர் நடித்து வருகின்றனர். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

எப்போதுமே விஜய் படங்களில் மலையாள நடிகர்களுக்கு அவ்வப்போது பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் தற்போது மலையாள சினிமாவில் டெரர் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சைன் டாம் சாக்கோ என்பவர் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இவருக்கு நல்ல வெயிட்டான கதாபாத்திரம் என்று கூறுகின்றனர். இதேபோல்தான் மாஸ்டர் படத்திலும் ஆண்டனி வர்கீஸ் என்பவர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் அந்த படத்திலிருந்து விலகினார் என்பதும் கூடுதல் தகவல்.

shine tom chacko-in-thalapathy65
shine tom chacko-in-thalapathy65
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்