33 வருடங்களுக்குப் பின் ராம்கி எடுக்க ஆசைப்படும் சூப்பர் ஹிட் படம்.. அந்த ரெண்டு ஹீரோ நடித்தால் வெற்றி உறுதி

Actor Ramki: பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக ஹேர் ஸ்டைல் மற்றும் ட்ரெஸ்ஸிங் இல் அதிக கவனத்தை கொடுத்தவர் நடிகர் ராம்கி. இவரிடம் தனித்துவமான நடிப்பும், பேச்சும் சிரிப்பும் அத்தனை அழகுக்கும் சொந்தக்காரராக இருந்தவர். அப்படிப்பட்ட இவர் முக்கால்வாசி வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

முக்கியமாக இவர் நடிப்பில் 33 வருடங்களுக்கு முன் வெளிவந்த இணைந்த கைகள் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வெற்றி பெற்றது. அதிலும் இன்டர்வல் பிளாக்கில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து வெளியான திரைப்படம். இந்த படத்தின் விறுவிறுப்பான காட்சிகளும், அடுத்து என்ன நடக்கும் என்று மக்களை பரபரப்பாக யோசிக்க வைக்கும் படமாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

Also read: செகண்ட் இன்னிங்ஸ் கைகொடுக்காத 5 நடிகர்கள்.. ராம்கி முதல் ஒதுக்கப்பட்ட சாக்லேட் பாய்ஸ்

அப்போதைய காலத்திலேயே இன்டர்வெல் பிளாக் சீனை செம மாஸ் ஆக வைத்து மக்களிடம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இதில் நடித்த ராம்கி மட்டும் அருண்பாண்டியன் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு விரும்பி பார்க்கும் படமாக அமைந்தது. அப்படிப்பட்ட இந்த படத்தை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார் ராம்கி.

இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி கதைகளை வைத்து அமைந்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறார். அத்துடன் நான் மற்றும் அருண்பாண்டியன் நடித்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக விஷால் மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும். அத்துடன் படம் தாறுமாறான வெற்றியை கொடுக்கும் என்று கூறுகிறார்.

Also read: ராம்கி நடித்து மெகா ஹிட்டான 5 படங்கள்.. பல வித்தியாசமான படத்தில் நடிச்சிருக்காரே மனுஷன்

இதுபோன்று பழைய படங்கள் என்றைக்குமே மறக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அதை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக மக்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். ஏற்கனவே பழைய மாதிரி படங்கள் மற்றும் பாடல்கள் தற்போது இல்லை என்று மக்கள் கொஞ்சம் புலம்பிக்கொண்டு தான் வருகிறார்கள்.

அதனால் இணைந்த கைகள் மறுபடியும் வந்தால் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். அந்த வகையில் அதில் நடித்த அருண்பாண்டியன் மற்றும் ராம்கி தற்போது வரை மக்களின் பேவரைட் கதாநாயகர்களாகத் தான் இருக்கிறார்கள். அப்போதைக்கு வெளிவந்த ஒரு கிளாஸ் மாஸ் திரைப்படம் தான் இணைந்த கைகள் என்றே சொல்லலாம்.

Also read: ராம்கியை கண்ணீர் விட வைத்த நிரோஷாவின் 5 ஹாட் பாடல்கள்.. கார்த்திக்கும், கமலும் அடித்த லூட்டிகள்

- Advertisement -