போலீஸிடம் சிக்கும் ஜீவானந்தம், ஈஸ்வரி.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் கடந்த வாரம் முழுக்க அப்பத்தாவை சுற்றியே கதை ஓட்டம் இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. திருவிழா மேடையில் தன்னுடைய 40 சதவீதம் சொத்து யாருக்கு என்பதை அப்பத்தா எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டார். குணசேகரனும் தான் திட்டமிட்டபடி அப்பத்தாவை கொலை செய்ய எல்லா பிளானையும் பக்காவாக செய்தார்.

அப்பத்தாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அதை இறங்கி பார்த்த போது அப்பத்தா இருந்த கார் வெடித்து சிதறிவிட்டதாகவும் சொல்லி ஞானம் கதறி அழுகிறார். ஒரு பக்கம் கதிர் அப்பத்தாவை சொத்துக்காக கொலை செய்தது ஈஸ்வரியின் கள்ளக்காதலன் ஜீவானந்தம் தான் என பழியை தூக்கி போடுகிறார்.

ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி, ஜனனிக்கு குணசேகரன் பற்றி தெரியும் என்பதால் ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி செல்கிறார். அதே நேரத்தில் ஜனனி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அப்பத்தாவை பற்றி விசாரிக்கிறார். காவல்துறையினர் குண்டுவெடித்த இடத்தை ஜனனி மற்றும் சக்தியிடம் சொல்லுகிறார்கள். உடனே ஜனனி அந்த இடத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

Also Read:இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி.. இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு தான் இருக்கும் இடத்தின் லொகேஷன் அனுப்பியதும் ஈஸ்வரி அந்த இடத்திற்கு புறப்படுகிறார். ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்த பொழுது அவர் ஈஸ்வரியிடம் குணசேகரன் செய்த தப்புக்கு நம்ம கிட்ட எந்த ஆதாரமும் இல்ல பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த இடத்திற்கு போலீஸ் விரைந்து வருகிறது.

குண்டு வெடித்த இடத்தில் ஜனனி அப்பத்தாவின் கிழிந்த சேலை துண்டை பார்க்கிறார். அதை பார்த்து கதறி அழுத ஜனனி உங்களை இப்படி பண்ணியவர்களை சும்மா விடமாட்டோம் என்று சொல்கிறார். வீட்டில் விசாலாட்சி ரேணுகா மற்றும் நந்தினி இடம் அந்த அம்மா எங்கே என்று கேட்க, ரேணுகா நடந்ததை எல்லாம் சொல்லி அழுகிறார்.

உண்மையிலேயே அப்பத்தா இறந்து விட்டதை யாராலும் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில், அப்பத்தா இறந்திருந்தால் அது குணசேகரனின் வேலையாகத்தான் இருக்கும் என நன்றாக தெரிகிறது. அப்பத்தாவின் சாம்பலை கரைக்க சென்று இருப்பதாக சொல்லப்படும் குணசேகரனின் காட்சிகள் வந்தால் தான், உண்மை என்னவென்று தெரியும்.

Also Read:லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang