திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

நிஜ வாழ்க்கையில் உயிருக்கு போராடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. தனக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது!

விஜய் டிவியில் 4 அண்ணன் தம்பிகளின் கூட்டுக் குடும்ப கதையம்சம் கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மருமகளாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபலம் ஒருவர் நிஜ வாழ்க்கையில் உயிருக்கு போராடும் பரிதாப நிலையில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் தனக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது என்றும் பெண்கள் அவசியம் மருத்துவமனையில் மார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

இவர் கடந்த ஆண்டு தன்னுடைய மார்பகத்தில் கட்டி இருந்ததால் அதை ஆபரேஷன் மூலம் அகற்றி உள்ளார். இதனால் மாதம் தோறும் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்திய நிலையிலும், அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்திருக்கிறார்.

இதனால் ஆப்ரேஷன் செய்த இடத்தில் உயிர் போகும் அளவுக்கு திடீரென்று வலி ஏற்பட்டிருக்கிறது. அதன் பின் பதறிப் போன மீனா டாக்டரிடம் பரிசோதனை செய்தபோது அது ஹார்மோன் சேன்ஜ் காரணமாக வந்த வலி என்று டாக்டர் கூறிய பிறகு தான் மீனாவிற்கு உயிரை திரும்பி வந்ததாம்.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி

இருப்பினும் முன்பு ஏற்பட்ட மார்பக கட்டி மறுபடியும் ஏற்படக் கூடாது என்றால் தொடர்ந்து மார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் மீண்டும் அறிவுறுத்தினார். இதை தற்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ஹேமா வருடம் தோறும் பெண்கள் அனைவரும் மருத்துவமனையில் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறார்.

தனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் மீனா சோசியல் மீடியாவில் வலியுறுத்துகிறார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களது ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி மீனாவின் நிலையை குறித்து வருந்துகின்றனர்.

Also Read: விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

- Advertisement -

Trending News