சுறாவை போட்டு திமிங்கலத்தை பிடித்த பா. ரஞ்சித்.. ஒரே டீசரால் கன்னா பின்னா என எகிறும் மார்க்கெட்

Pa Ranjith: பா. ரஞ்சித் இப்போது டாப் ஹீரோக்களின் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கிறார். அதனாலயே பல முன்னணி ஹீரோக்கள் இவருடன் பணிபுரிவதற்கு ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் சுறாவை போட்டு மிகப்பெரும் திமிங்கலம் ஒன்றை பிடித்து இருக்கிறார்.

தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இவர் இயக்கி முடித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது. சமீபத்தில் கூட இதன் டீசர் வெளியாகி பலரையும் மிரட்டி இருந்தது.

அதில் விக்ரம் ரத்த வெறி கொண்டு பாம்பை இரண்டாக பிச்சு போடும் காட்சி வேற லெவலில் இருந்தது. அதைப் பார்த்து கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் கூட மிரண்டு தான் போயிருக்கிறது. அதன் காரணமாகவே இப்போது பா ரஞ்சித்துக்கு மார்க்கெட் கன்னா பின்னா என்று எகிறி உள்ளது.

Also read: திடீரென இணையத்தை மிரட்டும் சூரிய புத்திர கர்ணன் டீசர்.. தங்கலானை மிஞ்சும் எதிர்பார்ப்பு

அதில் ஒன்றுதான் தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் ஹிந்தி பட வாய்ப்பு. தங்கலான் டீசரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாக்ஸ் ஆபிஸ் டாப் ஹீரோ ஒருவருக்கு போட்டு காண்பித்திருக்கிறார். அதை பார்த்து மிரண்டு போன அந்த ஹீரோ இப்போது பா ரஞ்சித்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அந்த ஹீரோ யார் என்பது இப்போது வரை சஸ்பென்ஸ் ஆக தான் இருக்கிறது. ஆனால் விரைவில் ரஞ்சித்துடன் அவருடைய மீட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மற்ற பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்து விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

Also read: அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்