திடீரென இணையத்தை மிரட்டும் சூரிய புத்திர கர்ணன் டீசர்.. தங்கலானை மிஞ்சும் எதிர்பார்ப்பு

Vikram – Karnan Movie Teaser: பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பற்றிய அறிவிப்பு அல்லது போஸ்டர், டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாவதாக இருந்தால் அது சில நாட்களுக்கு முன்பே மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி விடும். ஆனால் சீயான் விக்ரம் நடித்திருக்கும் கர்ணன் படத்தின் டீசர் நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

விக்ரமுக்கு அடுத்தடுத்து தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கர்ணன் என்று ஒரு படம் அவர் லிஸ்ட்டில் இருப்பது யாருக்குமே தெரியாது. தெரிந்தவர்களும் மறந்து இருப்பார்கள். ஏனென்றால் இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்தை இயக்குபவர் விமல்.

Also Read:அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

மகாபாரத கதையின் முக்கிய கேரக்டரான கர்ணனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவதாக அப்போது அறிவிப்பு வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 300 கோடி செலவு தயாரிக்க திட்டமிட்டு இருந்த கர்ணன் படத்தின் ஒரு சில ஆக்சன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் படத்தை பற்றி எந்த அறிவிப்பும் கடந்த ஆறு வருடங்களாக வெளியாகவில்லை.

இந்த டீசரில் சீயான் விக்ரம் ஒரு போர்க்கள சீனில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்த கரிகாலனையே மிஞ்சும் அளவிற்கு இந்த கர்ணன் இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக மெய் சிலிர்த்து போயிருக்கும். அந்த அளவுக்கு இதிகாசத்தில் வாழ்ந்த கர்ணன் கேரக்டரை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

Also Read:பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்

ஒரு பக்கம் இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம் உண்மையிலேயே இந்த படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறாரா இல்லை ஏற்கனவே எடுத்த காட்சியை விக்ரமுக்கு தெரியாமலேயே ரிலீஸ் செய்து விட்டார்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் விக்ரம் தரப்பிலிருந்து இதுவரை இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் சொல்லப்படவில்லை.

சீயான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் படம் தங்கலான். அதற்கு போட்டியாக இப்போது கர்ணன் படம் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது . இந்த படத்தைப் பற்றி முழு தகவல் விரைவில் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:இறைவனைப் பார்த்து மிரண்ட சென்சார் போர்டு.. முதன்முறையாக ஜெயம் ரவி படத்துக்கு கிடைத்த சர்டிபிகேட்

- Advertisement -