வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நம்ம பிரச்சனையே ஊர் சிரிக்கிது, இதுல புதுசா ஒன்னு வேறய.. என்ன பாக்யா இதெல்லாம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதால் பாக்யாவை எல்லோரும் ஏளனமாக பார்க்கிறார்கள். போதாக்குறைக்கு பாக்யா இருக்கும் தெருவிலேயே கோபியும் குடி வந்துள்ளார்.

இதனால் அக்கம் பக்கத்தினர் பாக்யாவை கண்டபடி பேசி வருகிறார்கள். இப்படி நம்ம பிரச்சனையை ஊர் சிரிக்கும் நிலையில் புதிய பிரச்சனை ஒன்றில் தலையை கொடுத்து மாட்ட உள்ளார் பாகியா. அதாவது பாக்யாவின் சமையல் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரின் மகளை நாய் கடித்துள்ளது.

Also Read : மலர்ந்த காதலை பிரித்த பிக் பாஸ்.. இந்த வாரம் உறுதியாக வெளியேறப் போகும் நபர்

இதை அவர் பாக்யாவிடம் வந்து கூறுகிறார். இது ஒரு முறை இல்லை, பலமுறை பல பேரை இந்த நாய் கடித்து வேட்டையாடி உள்ளது. ஆனாலும் இது குறித்து யாரும் அசோசியேஷனில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் பாக்யா மற்றும் செல்வி இருவரும் செக்ரட்டரி இடம் பேசுகிறார்கள்.

அப்போது இந்த தெருவில் உள்ள நாய் தினமும் ஒருவரை கடிக்கிறது அதுமட்டும் இன்றி தெரு விளக்குகள் எரிவதில்லை என தொடர்ந்து புகார்களை பாக்யா கொடுக்கிறார். இதனால் கோபமடைந்த அவர் பாக்யாவை கண்டபடி திட்டுகிறார். இதையெல்லாம் சரி செய்ய பாக்யா போராட்டம் வரை செல்ல உள்ளார்.

Also Read : ராட்சசன் ஆக மாறிய சம்மந்தி.. குடும்பத்தோடு அசிங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஏற்கனவே பாக்யா பலரின் வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கும் நிலையில் ஊர் பிரச்சனைக்காக போய் மாட்டிக்கொள்ள உள்ளார். இதனால் புதிய எதிரியாக அந்த செக்ரட்டரி பாக்யாவுக்கு நிறைய குடைச்சல் கொடுக்க உள்ளார்.

இப்போதுதான் புதிய ஆர்டர் பாக்கியாவுக்கு வந்த வண்ணம் உள்ளது. இதிலிருந்து படிப்படியாக பாக்யா முன்னேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல இந்த விஷயத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளார்.

Also Read : நாசுக்காக காய் நகர்த்தும் தாத்தா.. அசால்டாக அடித்து நொறுக்கும் மன்மதன் கோபி

- Advertisement -

Trending News