புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஷங்கர், மணிரத்தினம் கூப்பிட்டும் பில்டப் பண்ணிய பழைய ஹீரோ.. வந்த பயத்தால் சரண்டர் ஆன கௌரவம்

Shankar-ManiRatnam: பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரம்மாண்ட இயக்குனர்களாக பார்க்கப்படும் ஷங்கர் மற்றும் மணிரத்தினம் படங்களில் வாய்ப்பு கிடைக்காதா என கிடையாய் கிடந்து வருகிறார்கள். அதேபோல் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அந்த வகையில் அதில் நடித்த பலருக்குமே நல்ல பெயரை இந்த படம் வாங்கி கொடுத்தது. மேலும் ஷங்கர் இப்போது இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார். கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. 80 ஹீரோ ஒருவரை ஷங்கர் மற்றும் மணிரத்தினம் தனது படத்தில் நடிக்க அழைத்துள்ளனர்.

Also Read : கமல் சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காத ஷங்கர்.. இந்தியன் 2 மீண்டும் துளிர் விட்ட சண்டை

ஆனால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று வரட்டு கௌரவத்தில் இருந்த ஹீரோ வாய்ப்பு அனைத்தையும் தவற விட்டுவிட்டார். இப்போது இளம் ஹீரோக்களே தங்களது படங்களை பயத்துடன் தான் வெளியிட்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு இப்போது உள்ள சூழலில் போட்டி நிலவி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அந்த ஹீரோ ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

அதாவது மைக் மோகன் தான் ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு இடைப்பட்ட காலத்தில் நிறைய வாய்ப்புகள் வந்த போதும் நிராகரித்து வந்தார். மேலும் நீண்ட வருடத்திற்கு பிறகு இப்போது நடித்துள்ள ஹரா படமும் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. இப்படியே போனால் அவ்வளவு தான் என்று மைக் மோகன் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.

Also Read : காவு வாங்கும் இந்தியன் 2, அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்.. வெடித்த சர்ச்சையால் ஷங்கர் எடுத்த முடிவு

அதாவது இனிமேலும் வாய்ப்புகளை விடக்கூடாது என்பதற்காக கிடைக்கும் படங்களில் நடிக்க இருக்கிறாராம். அந்த வகையில் தளபதி 68 படத்தில் மைக் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 68 படத்தில் பல ஹீரோக்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மோகனின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் விஜய்க்கு அண்ணனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவே மைக் மோகனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் தான்.

Also Read : வெங்கட் பிரபு தலையில் இடியை இறக்கிய தளபதி.. படம் முடியும் வரை சரோஜா சாமானிக்காலோ தான்

- Advertisement -

Trending News