நெல்சனை மோசமாக விமர்சித்த ரசிகர்கள்.. சரியான பதிலடி கொடுத்த லோகேஷ்

ஒரு மனிதனுக்கு வெற்றி,தோல்வி சகஜம் தான், என் நண்பனை உற்சாகப்படுத்துங்கள், அவரை ட்ரோல் செய்வதை விடுங்கள் என நெட்டிசன்களிடம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெல்சனை விட்டுக் கொடுக்காமல் கேட்டுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வி அடைந்ததையடுத்து, விஜய்யை வைத்து சரியாக படம் பண்ண தெரியவில்லை என பலரும் நெல்சனை விமர்சித்தனர். மேலும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து அவரை ஒரு வழிப்படுத்தினர்

இதனிடையே தற்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி தந்ததை அடுத்து, நெல்சா, நீங்கள் லோகேஷ் கனகராஜை பார்த்து படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள் என நெட்டிசன்கள் பலரும் காம்பேர் செய்து மீம்ஸ்களைப் போட்டு விமர்சித்து வருகின்றனர்.

இதை அறிந்த லோகேஷ் கனகராஜ், நானும் , நெல்சனும் நல்ல நண்பர்கள். அவர் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசக்கூடியவர் நான் சற்று அமைதியாக இருப்பேன், ஆனால் என்னை எப்படி நீங்கள் எல்லோரும் உற்சாகப்படுத்துகிறீர்களோ, அதே போல அவரையும் நீங்கள் உற்சாகப்படுத்துங்கள். அவர் கண்டிப்பாக ஒரு நல்ல படத்தை கொடுத்து, உங்கள் முன் மீண்டும் வெற்றி இயக்குனராக வருவார் என நம்பிக்கையுடன் பேசினார்.

மேலும் பேசிய லோகேஷ் கனகராஜ், வெற்றி தோல்வி எல்லா விஷயத்திலும் சகஜமானது. நான் தற்போது வெற்றி இயக்குனராக உள்ளேன், ஒரு நாள் நான் கூட தோல்வி அடையலாம் எனவும், இதுபோல நெல்சனை ட்ரோல் செய்யமால் அவரை உற்சாகப்படுத்துங்கள் எனவும் நெட்டிசன்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே பெருந்தன்மையுடன் பேசக்கூடிய இயக்குனர் என கோலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடமும் பெயர் வாங்கியவர். இதனிடையே தற்போது நெல்சனுக்காக, லோகேஷ் கனகராஜ் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் வெற்றியை மட்டுமே கொண்டாடாமல் தன் நண்பரும் வெற்றியடைய வேண்டும் என்பதில் லோகேஷ் கனகராஜ் காட்டும் அன்பு வேறு யாரும் காட்ட முடியாது எனவும் பலரும் வியந்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்