நயன்தாராவின் பழைய புகைப்படங்களை வெளியிடும் மர்ம நபர்.. சைலண்ட்டாக வேலைப்பார்க்கும் நயன்

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் முன்னணி நடிகையாக  நயன்தாரா நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அண்மையில் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்தபடியாக விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இதன்பிறகு, நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இரண்டு படங்களில் நயன்தாரா  நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நயன்தாரா எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே நயன்தாரா அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை அவருடைய சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிடுவார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்னணி நட்சத்திரங்களின் எந்த ஒரு புகைப்படம் வெளியானாலும், அது தீயாய் பரவி வரும். தற்போது நயன்தாராவின் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் வெளியிட்டு வருகிறார். நயன்தாராவின் பழைய புகைப்படங்களில் உடல் எடை கூடி காணப்படுகிறார்.

இதனால் சினிமாவில் அவரது மார்க்கெட் குறையும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நயன்தாரா நம்பகதகுந்த வட்டாரத்தில் பணம் கொடுத்து அந்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்க சொல்லியிருக்கிறார். நயன்தாரா தற்போது உச்சத்தில் இருப்பதால் அவருக்கு பிடிக்காத யாரோ தான் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner