Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி வீட்டிற்குள்ளே எப்பொழுதும் புலம்பிக்கொண்டு புருஷன் கெட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் குணசேகரன், நந்தினிடம் பேசின பேச்சுக்கு பொறுமை இழந்த பின்பு இங்கு நடந்த அத்தனை விஷயத்தையும் என் புருஷன் வந்ததும் சொல்கிறேன்.
கண்டிப்பாக அவர் யார் பக்கத்தில் நிற்பார் என்று அப்பொழுது உங்களுக்கு புரியும் என சவால் விட்டார். இதை பார்க்கும் பொழுது ஒருவேளை கதிர்க்கு ரோசம் வந்து அண்ணனிடம் எதிர்த்து பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். நந்தினியும் இந்த விஷயத்தில் புருஷன் மேல் முழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தார்.
Also read: இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
அதனால் அவர் வந்ததும் நடந்த விஷயத்தை நந்தினி ஆவேசத்துடன் கொட்டி தீர்த்தார். இதை கேட்ட கதிர் முகத்தில் ஒரு கோபம் தெரிந்தது. இதனை தொடர்ந்து குணசேகரனிடமும் நந்தினிக்காக சப்போர்ட் பண்ணி பேசினார். அப்பொழுது ஒரு வேலை கதிர் திருந்தி விட்டார் என்று நினைத்தோம். ஆனால் இங்குதான் மிகப்பெரிய ட்விஸ்ட் ஆகிவிட்டது.
அதாவது நந்தினி கேட்டதும் குணசேகரன் இடம், அவளை அடித்ததற்கு கை ஓங்கினீர்களா என்று கதிர் கேட்டார். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் அவளை கழுத்து பிடித்து திருவீருக்கலாம். அவளை பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க என்று விஷப் பூச்சியாக குணசேகரனை விட மோசமாக நந்தனிடம் நடந்து கொண்டார்.
Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நந்தினி, மொத்தமாக புருஷனை நம்பி ஏமாந்து விட்டோம் என்ற விரக்தியில் புலம்ப ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் குணசேகரனும், நந்தினியை வாய்க்கு வந்தபடி இதுதான் கிடைத்த சான்ஸ் என்று பேச ஆரம்பித்து விட்டார். கதிர் என்னோட தம்பி அவனுடன் சுவிட்ச் என்னுடைய கையில் இருக்கிறது. நான் ஆட்டி வைக்கிற பொம்மை மாதிரி அவன், அதனால இருக்க இடம் தெரியாம ஒழுங்கா வாழ்க்கை நடத்திரு என்று பேசிவிட்டார்.
இதற்கு எதற்கு கதிரை வைத்து நந்தினிக்கு இவ்வளவு பெரிய வாக்குவாதத்தை நடத்தி இருக்கணும். நந்தினி பேசும்போது ஒருவேளை கதிர் திருந்திடுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு எதிராக கதிர் இன்னும் பல மடங்கு வெறிபிடித்த வேட்டை நாயாக குணசேகரனின் வாலை பிடித்து தொங்கிக் கொண்டு வருகிறார். இதெல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டான் இனிமேல் என்னுடைய ஆட்டம் இருக்கு என்று நந்தினி சபதம் எடுத்திருக்கிறார். ஆக மொத்தத்தில் நந்தினியின் நம்பிக்கையே மொத்தமாக சுக்குநூறாக உடைத்து விட்டார்.