Connect with us
Cinemapettai

Cinemapettai

sivaji-mgr-Nagesh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்

தமிழ் சினிமாவின் தூண் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிக்க மாட்டோமா, இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலபேர். நடிப்பில் தனி முத்திரை பதித்த இவர் கிட்டத்தட்ட 288 படங்கள் நடித்துள்ளார்.

இவர் நடித்த 288 படங்களில் கிட்டத்தட்ட 250 படங்கள் ஹீரோவாக மட்டுமே நடித்து சாதனை புரிந்துள்ளார். சிவாஜியின் நடிப்பு அந்தகாலத்தில் உச்சத்தில்  இருந்த போது அவருக்கு சக போட்டியாளராக எம்ஜிஆர் மட்டுமே இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, எம் என் நம்பியார் போன்ற மூத்த கலைஞர்கள் தமிழ் சினிமாவில் அதிக படங்கள் நடித்து சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இருக்கின்றனர்.

Also read: தேசிய விருது வாங்கிய முதல் 5 தமிழ் படங்கள்.. சிவாஜியை முந்திய எம்ஜிஆர்

சிவாஜி, இவருடன் இணைந்து நடித்த சக நடிகரான நாகேஷ் இவருடன் பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். அந்த காலத்தில் நாகேஷ் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. நாகேஷ் பல படங்கள் ஹவுஸ்புல் ஆகி ஓடின.

நாகேஷ் சிவாஜியுடன் நடித்த முதல் படம் நான் வணங்கும் தெய்வம். 1963ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்குனர் சோமு இயக்கினார். சிவாஜி கணேசன், பத்மினி  என பலரும் இந்த படத்தில் அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

Also Read : எல்லோரைப் போல் நாகேஷ்க்கும் வந்த ஆசை.. அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் விட்ட சோகம்

நாகேஷ், சிவாஜியுடன் நடித்த கடைசி திரைப்படம் படிக்காதவன். ரஜினிகாந்த் ,நாகேஷ், சிவாஜி கணேசன் 3 பெயரும் இணைந்து இந்த படத்தில் ஒவ்வொருத்தருக்கும் நான் சளைத்தவர் இல்லை என்பதுபோல் நடித்து மிரட்டி இருப்பார்கள்.

எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த நாகேஷ், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த நம்மவர் படத்திற்காக மட்டுமே தேசிய விருது வாங்கியுள்ளார். பிற்காலத்தில் நாகேஷின் வாரிசான ஆனந்த்பாபு நடிக்க வந்தாலும் தன் அப்பா பெயரை நடிப்பில் நிலை நிறுத்த தவறிவிட்டார்.

Also Read : எங்களுக்கும் காமெடி வரும் என நகைச்சுவையில் கலக்கிய 5 நடிகைகள்.. தேங்காய் சீனிவாசனை அலறவிட்ட சௌகார் ஜானகி

Continue Reading
To Top