ஏ கிரேடு நடிகர்களிடம் வாங்கும் கடன்.. அஜித் வார்த்தைய காப்பாற்றும் உதயநிதி

Nadigar Sangam to raise funds from A Grade Actors to build a building: விலைவாசி ஏறி போயாச்சு நடிகர் சங்கம் கட்டடம் கட்ட இன்னும் அதிக நிதி தேவைப்படுகிறது என்று வசூலில் இறங்க ஆரம்பித்து விட்டனர் நடிகர் சங்க நிர்வாகிகள். பழைய அணிக்கு மாற்றாக நாசர் தலைமையிலான புதிய அணி களம் இறங்கியதில் இருந்தே நடிகர் சங்க கட்டடம் என்பது ஒரு கனவாக இருந்து வருகிறது.

நடிகர் விஷாலோ, நடிகர் சங்க கட்டடத்தின் முதல் நிகழ்ச்சியே எனது திருமணம் தான் என்று பொதுச்செயலாளராக பொறுப்போடு கூறியிருந்தார். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் சமீபத்தில் நடிகர் சங்கத்தின்  கட்டடம் தொடர்பாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது.

தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் பலரும் குஷ்பூ, சத்திய பிரியா, கோவை சரளா முதலான நடிகைகளும் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கூட்டம் சிறப்பாக நடைபெற்று செய்தியாளர்கள் சந்திப்பும் நிகழ்ந்தது.

Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

விலைவாசி உயர்ந்ததால் தற்போதைய நிலையில் நடிகர் கட்ட கட்டடம் கட்ட 30 கோடி வரை கடன் தேவைப்படுவதாகவும் ஆனால் 40 கோடி வரை நிதிதிரட்ட உள்ளதாகவும் கூறியுள்ளார் பொருளாளர் கார்த்தி.  இப்போதைக்கு எக்ஸ்ட்ரா பணம் வாங்கி சேர்த்து வைத்துக் கொள்வதாக எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு இருந்தார் கார்த்தி.

மேற்கூறியவற்றை நடிகர் சங்கப் பிரதிநிதிகளிடம் கூறி தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஏ கிரேடு தகுதி உள்ள 30 நடிகர்களிடமிருந்தும் 30 கோடி வட்டியில்லா கடனாக பெறப்போவதாக கூறியுள்ளனர். நடிகர் சங்கத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தி திருப்பி கொடுக்கப் போவதாகவும் கூறி உள்ளனர் இந்த நிர்வாகிகள்.

இந்தத் திட்டத்தை விஜயகாந்த் தலைவராக இருக்கும்போதே அஜித் அவர்கள் கூறியுள்ளாராம். ஆனால் இதை நடைமுறைப்படுத்த இவ்வளவு காலம் ஆகிவிட்டது.  அப்போது அஜித் கூறியதை, இன்று தீர்மானத்திற்கு முன்னதாகவே சமீபத்தில் முதல் ஆளாக உதயநிதி தன் பங்குக்கு ஒரு கோடி நிதி உதவி கொடுத்து தொடங்கி வைத்துள்ளார். இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட கட்டடத்தை கட்டப் போவதாக அறிக்கை விட்டுள்ளார் விஷால்.

Also read: ஒரு கோடி காசுக்கு கூட தலைவர் விஷாலை மதிக்காத உதயநிதி.. நம்ம செஞ்ச விஷ வேலை அப்படி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்