விஜயா செய்த பித்தலாட்டத்தில் மாட்டிய மீனா.. கையும் களவுமாக மாட்டும் மனோஜ், அவமானத்தில் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒரு பக்கம் மனோஜை ஈசியாக ஏமாற்றலாம் என்று சரியாக பிளான் பண்ணி பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கிட்டு போயிட்டார்கள். இன்னொரு பக்கம் மனோஜிடம் கொடுத்த அந்த பணத்தை திரும்ப எப்படியாவது அபகரித்து விடனும் என்று இன்னொரு பிளான் போட்டு கள்ள நோட்டு என்று சொல்லி பணத்தை வாங்கிட்டு பொருட்களை போலீஸ் ஸ்டேஷனில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி போய் விட்டார்கள்.

இதனால் மக்கு மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பொருட்களை கேட்கிறார். அங்கு போலீஸ் சொன்னது, அப்படி யாரும் நாங்கள் வந்து பொருள்களை எடுக்கவில்லை. நீங்கள் ஏமாந்து போய் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் மனோஜ், விஜயாவிடம் வந்து புலம்பி மீனா நகையை வாங்கிட்டு விற்று விட்டார். இது தெரியாத ரோகிணி கல்யாணத்துக்கு போயிட்டு வந்து என்னுடைய புருஷன் சம்பாதித்த 4 லட்சம் ரூபாய் பணம் என்று பெருமையாக சொல்கிறார்.

ரோகினியும் மனோஜும் அவமானப் படம் தருணம்

இப்படி ரோகிணி பெருமையாக சொல்ல சொல்ல விஜய்யாவுக்கு கடுப்பாக இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்கள் முன்னாடி எதையும் காட்டிக்க கூடாது என்று அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் பாட்டியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவர் அண்ணாமலை வீட்டுக்கு வரப் போகிறார். அந்த வகையில் பாட்டிக்கு ஒரு செயின் வாங்கிக் கொடுக்கலாம் என்று முத்து மீனாவும் முடிவு பண்ணி இருக்கிறார்கள்.

ஆனால் அதற்கான பணம் இப்பொழுது இல்லை என்பதால் மீனா தன்னுடைய நகையை வைத்து பாட்டிக்கு ஒரு செயின் வாங்கலாம் என்று முடிவு பண்ணி அண்ணாமலையிடம் கொடுத்த நகையை கேட்கிறார்கள். ஆனால் மனோஜ் அந்த நகை வித்து விட்டதால் போலியான கவரிங் நகையை அதே மாதிரி செய்து விஜயாவிடம் கொடுக்கிறார்.

உடனே விஜயா அந்த நகையை மீனாவிடம் கொடுத்து விடுகிறார். அந்த நகையை எடுத்துட்டு மீனா முத்து பாட்டிக்காக செயின் வாங்க போகிறார்கள். ஆனால் போன இடத்தில் மீனா கொண்டு வந்த நகை கவரிங் என்று தெரிய வந்த நிலையில் மீனாவுக்கு தெரிந்த நபர் என்பதால் எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறார். இது எப்படி கவரிங் நகையாக மாறியது என்று முத்து மீனா குழம்பிக் கொள்கிறார்கள்.

பிறகு முத்து இதை அப்பாவிடம் போய் கேட்கலாம் என்று கிளம்புகிறார்கள். இதனை அடுத்து இந்த பிரச்சனை வந்த நிலையில் விஜயா, ஒருவேளை மீனா குடும்பத்தில் போலியான நகை தான் போட்டு அனுப்பி இருக்கிறார்கள் என்று அப்படியே மீனா மீது பழியை போடலாம். இல்லையென்றால் விஜயா, அண்ணாமலையிடம் மனோஜ் பற்றிய விஷயங்களை போட்டு உடைத்து மனோஜ் பண்ணிய பித்தலாட்டத்தை சொல்லி விடலாம்.

அப்படி மட்டும் ஆகிவிட்டால் ரோகிணி போட்ட ஆட்டத்திற்கு மனோஜ் கையும் களவுமாக மாட்டி முத்துவிடம் அடி வாங்குவார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரோகிணி அனைவரும் முன்னாலையும் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -