பாட்டிக்கு யாரும் கொடுக்காத சர்ப்ரைஸை கொடுத்து அசத்தும் முத்து.. ரோகினியை ஓரங்கட்டிய மீனா

Sirakdiakkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டியின் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று விஜயா குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி வீட்டை அலங்காரம் செய்து பாட்டியை குஷிப்படுத்தி விட்டார்கள். இந்த சூழலில் பாட்டி சொன்னது எனக்கு யார் பெஸ்ட் கிப்ட் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு நான் ஒரு சிறந்த பரிசு கொடுக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்ட ஒவ்வொருவரும் பாட்டிக்கு எப்படியாவது ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன்படி ரோகினி, மனோஜிடம் உங்க பாட்டிக்கு என்ன பிடிக்கும் என்ன கொடுக்கலாம் என்று யோசிக்க சொல்கிறார். அதற்கு மனோஜ் ஒரு புடவை வாங்கிக் கொடுக்கலாம் என்று சொல்கிறார். உடனே ரோகிணி அது ஓகே தான் இருந்தாலும், இன்னும் என்ன பெஸ்ட்டா கொடுக்கலாம் என்று யோசித்துப் பாரு என சொல்கிறார்.

முத்துவை பார்த்து வயிற்றெரிச்சல் படும் ரோகிணி

அதற்கு மக்கு மனோஜ், பாட்டிக்கு சின்ன வயசில் ஒரு நவரத்தின மாலை போட வேண்டும் என்று ஆசை அதை நாம் வாங்கிக் கொடுக்கலாம் என சொல்லிய நிலையில் ரோகிணி டபுள் ஓகே என்று இதை வாங்குவதற்கு முடிவு பண்ணி விட்டார்கள். இவர்களுக்கு அடுத்து சுருதி, எனக்கு அந்த கிப்ட் முக்கியமில்லை. ஆனால் எந்த போட்டியாக இருந்தாலும் அதில் நான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

அதனால் நாம் உங்கள் பாட்டிக்கு ஏதாவது புதுசாக வாங்கி கொடுக்கலாம் என்று ரவி இடம் சொல்லி யோசிக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து விஜயா அவருடைய தோழிக்கு போன் பண்ணி ஒரு கிப்ட் வேண்டும் என்று கேட்கிறார். எப்படியாவது பாட்டி கொடுக்கும் கிப்ட்டை நாம் வாங்கி விட வேண்டும் என்று விஜயா ஆசைப்படுகிறார்.

sirakadikkum asai (52)
sirakadikkum asai (52)

அடுத்ததாக மீனா, தங்கைக்கு போன் பண்ணி மொபைல் வாங்கிட்டு அதில் பாட்டியை வைத்து போட்டோ வீடியோ எடுத்து மலரும் நினைவுகளை பற்றி சொல்ல வைக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் பாட்டியை சந்தோசப்படுத்தி பாட்டி வைத்திருக்கும் கிப்டை வாங்குவதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால் முத்து மட்டும் வீட்டில் இல்லை. நேரம் ஆக ஆக ஒவ்வொருவருக்கும் பயம் வருகிறது முத்து பழையபடி குடித்துவிட்டு வந்துருவாரோ என்று நினைக்கிறார்கள்.

ஆனால் முத்து பாட்டிக்கு செயின் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் குளறுபடியானதால் அதற்கு பதிலாக ஏதாவது கொடுத்து பாட்டியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று யோசிக்கிறார். அப்படி முத்து யோசித்த நிலையில் அவருக்கு கிடைத்த ஐடியா மூலம் பாட்டியை நிச்சயம் சந்தோசப்படுத்தி பெரிய ஆச்சிரியத்தை உண்டாக்கப் போகிறது.

அதாவது பாட்டியின் சிறு வயது தோழிகளாக இருந்த இரண்டு பேரை கூட்டிட்டு வந்து பாட்டி முன்னாடி நிறுத்தினால் பாட்டி ரொம்பவே சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறார். அதற்காக முத்து கூட்டிட்டு வரும் நபர் யார் என்றால் வடிவுக்கரசி மற்றும் கேஆர் விஜயா. ஆம் இவர்கள் தான் புதுசாக எண்டரி கொடுக்கப் போகிறார்கள். அதுவும் முத்துவின் பாட்டி தோழிகளாக வரப் போகிறார்கள்.

அந்த வகையில் பாட்டியின் 80 வது நாளை சிறப்பிக்கும் விதமாக முத்து யாரும் கொடுக்காத கிப்டை கொடுத்து அசத்தப்போகிறார். இதனால் வயித்தெரிச்சலில் ரோகிணி மற்றும் விஜயா பொங்குகிறார்கள். எப்படியும் கடைசியில் முத்து ஜெயித்தால் மீனா ஜெயித்த மாதிரி என்பதற்கு ஏற்ப மீனா கெத்து காட்டியதால் ரோகிணி விஜயா அடங்கிப் போய்விட்டார்கள்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -