புதன்கிழமை, நவம்பர் 13, 2024

கொழுந்தியாள் போட்ட பட்ஜெட்.. தெறித்து ஓடிய பாண்டியன் ஸ்டோர் மூர்த்தி!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் நான்கு பேருக்கும் திருமணம் ஆனதால் தற்போது ரூம் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே 3 ரூம் மட்டுமே இருப்பதால் சமீபத்தில் திருமணமான ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவருக்கும் தங்களுடைய ரூமை தனம் மற்றும் மூர்த்தி கொடுத்துவிட்டு ஹாலில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் தனத்தின் கைகுழந்தை கண்ணன் கொசுக்கடியால் அவதிப்பட்டு, காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. எனவே பாண்டியனை பார்க்கவந்த தனத்தின் அம்மா கொசுக்கடியில் இப்படி கஷ்டப் படுகிறாய் என்று கேட்க, உடனே மூர்த்தி இன்னும் கொஞ்ச நாளில் நாங்கள் புது வீடு கட்ட போகிறோம் என கூறுகிறார்.

இதைக் கேட்டதும் மீனா குஷியாகி விட்டார். ஏனென்றால் அட்டாச் பாத்ரூம் வேண்டும் என்ற பல நாளாக ஜீவாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் மீனாவிற்கு, புது வீட்டில் அந்த வசதி இருக்கும் என ஆசைப்படுகிறாள்.

கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மூர்த்தியிடம் புது வீடு, எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என ஒரு பிளான் போட்டு அந்த பேப்பரை மீனா மூர்த்தியிடம் காட்டுகிறாள். அந்த பிளான் பெரிய பட்ஜெட்டில் இருந்ததால் பார்த்ததும் மூர்த்தி பதறிப் போகிறார்.

மேலும் மீனா போட்ட பிளான்க்கு அதிக பணம் வேண்டுமே என்றும், வீட்டில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா, அதை எப்படி நிறைவேற்றுவது என்ற குழப்பத்தில் வந்த வேகத்திலேயே கிளம்பி மீண்டும் கடைக்கு சென்றுவிட்டார்.

இப்பதான் படாதபாடுபட்டு சிறிய மளிகை கடையில் இருந்து டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முன்னேறியது. அதே சூட்டோடு தற்போது பெரிய வீடு கட்ட போட்ட பிளான் எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News