புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தேரை இழுத்து தெருவுல விட்ட மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை சம்மந்துக்கு எழுதிக் கொடுத்ததால், கடைசியில் அவருடைய சுய ரூபத்தைக் காட்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் வேறு வழி இல்லாமல் கதிர்-முல்லை வாடகைக்கு இருக்கும் வீட்டிற்கு வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒவ்வொரு நாளும் பலவித பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் சீக்கிரம் அவர்கள் வாங்கிய வீட்டுமனையில் புதிதாக வீடு கட்டி விரைவில் குடியேற பார்க்கின்றனர். இந்த சமயத்தில் ஏற்கனவே கதிர் முல்லை இருவரும் போட்டியில் வெற்றி பெற்ற பத்து லட்ச தொகையை மூர்த்தி-தனம் இருவரிடம் கொடுத்த நிலையில், 5 லட்சத்தை மட்டுமே கொடுத்துவிட்டு மீதி இருக்கும் 5 லட்சத்தை கதிரிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம்கட்டிய புத்தம் புதிய சீரியல்

ஆனால் இப்போது இக்கட்டான சூழ்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இருப்பதால், கதிர் முல்லை தங்களிடமிருக்கும் 5 லட்சத்தை பாண்டியன் மற்றும் கயல் இருவருக்கும் கொடுப்பதாக சொல்லி தனத்திலும் கொடுக்கின்றனர். ஆனால் மூர்த்தி அதை வாங்க மறுக்கிறார்.

முல்லையின் நகையை இந்த பணத்தை வைத்து திருப்பிக் கொடுத்து விடு என்று சொல்லுகின்றனர். ஆனால் அதை கதிர் ஏற்க மறுத்து, அந்தத் தொகையை குழந்தைகளுக்காக கொடுக்கின்றார். இவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது மீனாவை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Also Read: முதல புருஷன், இப்ப பொண்டாட்டியா.? டிஆர்பிக்காக விஜய் டிவி பிரபலங்களை கூண்டோடு தூக்கும் சன் டிவி

ஆனால் தற்போது மீனா கழுத்து நிறைய நகை போட்டு நடமாடுவதை பார்த்த முல்லையின் அம்மா வயிற்றெரிசலில் கண்டபடி திட்டுகிறார். ஏற்கனவே வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை மறுபடியும் வேதனைப்படுத்துகிறார் முல்லையின் அம்மா.

ஆனால் இப்போது கூட மீனா தன்னுடைய நகையை அடமானம் வைத்து அதன் மூலம் வரும் தொகையால் விரைவில் வீடு கட்டுங்கள் என்றும் சொல்லாதது தான் பிரச்சனையாக பார்க்கின்றனர். இதன்பிறகு மீனாவுக்கு மனசு உறுத்தி அவரே தன்னுடைய கையால் நகைகளை கழட்டி தனத்திடம் கொடுக்கப் போகிறார். இதற்கெல்லாம் முல்லையின் அம்மாதான் காரணமாக இருப்பார். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி சின்னத்திரை ரசிகர்களை நாளுக்கு நாள் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: கண்டாங்கி சேலையில் காட்டுத்தனமான கவர்ச்சியில் சீரியல் நடிகை.. இளசுகளுக்கு குளிர் ஜுரம் வந்துடும் போல

- Advertisement -

Trending News