ஒரு சீன் கூட கனெக்ட் ஆகல, மொத்தமாக சொதப்பிய பகாசூரன்.. இரண்டரை மணி நேரம் கழுத்து அறுத்து விட்ட மோகன்.ஜி

இயக்குனர் மோகன் ஜி-யின் ருத்ரதாண்டவம், திரௌபதி படம் கொடுத்த எதிர்பார்ப்பை நம்பி ரசிகர்கள் பகாசூரன் படத்தை பார்க்க தியேட்டர் வந்திருந்தனர். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மோகன் ஜி பூர்த்தி செய்தாரா என்பதை இப்போது பார்க்கலாம். இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடித்திருந்தார்.

சமீபகாலமாக செல்வராகவன் இயக்கிய படங்கள் சரிவர போகாததனால் டைரக்ஷனை கைவிட்டு நடிப்பில் இறங்கினார். பீஸ்ட், சாணி காகிதம் படங்களில் கூட இவரது நடிப்பு பரவாயில்லை என்று சொல்லலாம். பகாசூரன் படத்தில் மட்டமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read : பகாசூரனை விட 10 மடங்கிற்கு மேல் வசூல் செய்த வாத்தி.. தலையை சுற்றி வைத்த முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

அதிலும் அவருடைய நடனம் ரசிகர்களுக்கு சிரிப்பை தான் வர வைக்கிறது. மேலும் பகாசூரன் படத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லாதது போல எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மோகன் ஜி சொல்ல வந்த கருத்து சரியானது தான். பெண்களுக்கு உடல் ரீதியான தொல்லை மற்றும் மொபைல் போன் மூலம் எப்படி பிரச்சனை ஏற்படுகிறது.

நகரத்தில் உள்ளவர்களுக்கு இந்த படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும் கிராமங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் சாதாரணமாக பெண்கள் கையில் இருக்கும் மொபைல் போனால் அவர்களுக்கு எப்படி பிரச்சனை ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை கிராம மக்களுக்கு ஏற்படுத்தும்.

Also Read : ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் செல்வராகவன்.. எல்லாம் அழுவ ரெடியா இருங்க

ஆனால் அதற்கான தீர்வை மோகன் ஜி முழுமையாக சொல்லாதது தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். மேலும் பின்னணி இசை ஓரளவு நன்றாக இருந்தாலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையவில்லை. பகாசூரன் படத்தை இரண்டரை மணி நேரம் ஓட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் மெதுவாக கதை நகருகிறது.

எப்போது படம் முடியும் என்று ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கும் அளவுக்கு கழுத்தை அறுத்துள்ளார் இயக்குனர். மேலும் பெண்களுக்கு மொபைல் போன் மூலம் தொந்தரவு தரும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தராமல் சுய ஒழுக்கம் இருந்தால் போதும் என்பது பழைய பஞ்சாங்கமாக உள்ளது.

இப்படி பகாசூரன் படத்தில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் உள்ளடங்கி உள்ளது. படத்துல சண்டைக் காட்சி வைக்கணும்னு ஸ்லோ மோஷன் ஃபைட் 5 அஞ்சு நிமிஷம் வச்சிருக்காரு. எல்லோருடைய நடிப்பும் எதார்த்தமாக இல்லாமல் செயற்கையாக உள்ளது. மேலும் படத்தின் கதாபாத்திரத்தின் தேர்வு சரியாக அமையவில்லை. நட்டி நடராஜ் நடிப்பு மற்றும் துப்பறியும் காட்சிகள் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

Also Read : 2022ல் கோலிவுட்டுக்கு புதுவரவாக வந்த 5 பிரபலங்கள்.. இயக்குனர் வேண்டாம் நடிகராக அவதரித்த செல்வராகவன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்