அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்

Rajinikanth – Vairamuthu: மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி இன்று வரை முன்னணி ஹீரோக்களுக்கான அறிமுக பாடல் என்பது எப்போதுமே அவர்களுடைய ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. சமீபத்திய காலங்களில் இது போன்ற அறிமுக பாடல்கள் ரொம்பவும் சாதாரணமாக எழுதப்பட்டு வருகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பாடல்கள் அந்த நடிகர்கள் அவர்களுடைய ரசிகர்களுக்கு சொல்ல வருவதை வரிகளின் மூலம் சொல்லிவிடும்.

பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களில் இடம் பெறும் அறிமுக பாடல்கள் எப்போதுமே தமிழ்நாடு மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே எழுதப்பட்டிருக்கும். படையப்பா படத்தில் கூட என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் கொடுப்பது முறையல்லவா என்று எழுதப்பட்டிருக்கும்.

Also Read:சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸாகும் அடுத்த படம்.. ரஜினியின் நண்பர் நினைவாக எடுத்த முடிவு

ரஜினிகாந்த்திற்கு பெரும்பாலும் இது போன்ற வரிகள் அமைந்த பாடல்களை எழுதியவர் வைரமுத்து தான். அப்படி அவர் எழுதிய ஒரு பாடல் வரி வேண்டவே வேண்டாம் என்று ரஜினி மறுத்து இருக்கிறார். ஆனால் வைரமுத்துவோ இந்த பாடல் வரி கண்டிப்பாக இந்த பாட்டில் வேண்டும். இதை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று சண்டையிட்டு அந்த வரியை வைத்து தற்போது அந்த பாடல் இன்றுவரை பிரபலமாக இருக்கிறது.

ரஜினிகாந்தின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் படம் அண்ணாமலை. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதில் வந்தேன்டா பால்காரன் என்னும் பாடல் இடம் பெற்றிருக்கும். அதில் அன்னை வாரி கொடுத்தது தாய்ப்பாலு, என்னை வாழ வைத்தது தமிழ் பால் என்ற வரிகள் இருக்கும். இந்த தமிழ் பால் என்று வரும் வரை வைப்பதற்கு ரஜினி ரொம்பவே யோசித்து வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

Also Read:சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.? ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் செய்யும் பாலிடிக்ஸ்

ஆனால் கவிப்பேரரசு வைரமுத்துவோ ரசிகர்களுடன் சேர்ந்து அமர்ந்து படம் பார்ப்பவன் நான், எனக்குத்தான் தெரியும் இந்த வரிகள் எந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்று. எனவே இந்த வரியை வைத்தே தீருவேன் என்று சண்டை போட்டு சொல்லி இருக்கிறார். கடைசியில் ரஜினி என்ன செய்வது என்று தெரியாமல் சரி என ஒப்புக்கொண்டாராம்.

படம் ரிலீஸ் ஆன போது இந்த பாடல் வரிகள் வரும் போது தியேட்டரில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆரவாரம் செய்திருக்கின்றனர். அப்போதுதான் வைரமுத்து சொன்னது உண்மை என ரஜினிக்கு தெரிந்ததாம். அதேபோன்று இதே படத்தில் வரும் கொண்டையில் தாழம்பூ பாடலின் வரிகளில் குஷ்பூ மற்றும் ரஜினியின் பெயர் வரும் பொழுது கூட தியேட்டரே அதிர்ந்து இருக்கிறது.

Also Read:ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்த தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்