சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.? ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் செய்யும் பாலிடிக்ஸ்

Actor Rajini: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் பற்றிய பேச்சு தான் இப்போது வைரலாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் ஆக மாஸ் காட்டப் போகும் சூப்பர் ஸ்டார் ஏற்கனவே ஹுக்கும் பாடல் மூலம் பலரையும் அலற வைத்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது இசை வெளியீட்டு விழாவுக்கு தயாராகி வரும் தலைவர் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களை கொடுப்பதற்கும் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அதில் தான் ஒரு சங்கடம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட் புக்கிங் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

Also read: ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்து தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசம் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. இதற்காக ட்ரெயினில் தக்கல் கோட்டாவில் டிக்கெட் போடுவது போல் ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தது தான் மிச்சம். ஏனென்றால் புக்கிங் ஆரம்பித்த 13 நொடிகளிலேயே அத்தனை டிக்கெட்டுகளும் விற்று விட்டதாக அறிவிப்பு வந்தது.

இதனால் ரஜினி தன்னுடைய ரசிகர் மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக டிக்கெட் கொடுக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியிருந்தார். ஆனால் அதுவும் சரியாக நடைபெறவில்லை. இதனால் இசை வெளியீட்டு விழாவில் எப்படி கலந்து கொள்வது என்று பல ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Also read: சோத்துலையும் அடிபட்டாச்சு, சேத்துலையும் அடிப்படனுமா?. ஜெயிலரால் வெளிநாடு புறப்பட்ட விஜய்

இது ஒரு புறம் இருக்க நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் 6000 இருக்கைகள் கொண்ட அந்த அரங்கில் தற்போது 500 இருக்கைகள் குறைந்துவிட்டது. இது நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பத்திரிகைக்காரர்கள் உட்பட எந்த மீடியாவுக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை.

ஏனென்றால் சன் நிறுவனமே மிகப்பெரிய மீடியா என்பதால் இப்படி ஒரு முடிவை தயாரிப்பு தரப்பு எடுத்து இருக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்ட 350 டிக்கெட்டுகளையாவது ரசிகர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்து வருகிறது. இதன் மூலம் ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் பாலிடிக்ஸ் செய்வதாகவும் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என்பது போல் ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என திரையுலகில் பேசி வருகின்றனர்.

Also read: மாலத்தீவில் ரஜினி போட்ட சீக்ரெட் மீட்டிங்.. மொத்த நிம்மதிக்கும் உலைவைக்கும் குடும்பம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்