லியோ ஆடியோ லான்ச் டிக்கெட் வித்து பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. பிஸ்மிக்கு விஜய் தரப்பில் கொடுத்த பதிலடி

Leo Audio Launch: பொதுவாக ஒருவர் அபரிவிதமாக வளர்ச்சி அடைந்து விட்டால் நாளா பக்கமும் அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அப்படி தான் தற்போது விஜய்யும் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டு மாட்டியிருக்கிறார். பொதுவாக இவர் படங்கள் ரிலீஸ் ஆகுது என்றால் சாதாரணமாக திரையரங்கிற்கு வந்து விடாது. ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து பின்பே ஒரு வழியாக வந்து சேரும்.

அந்த வகையில் தற்போது லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு பிரச்சனை எழுந்து வருகிறது. அதாவது முதலில் தமிழ்நாட்டில் ஆடியோ லான்ச் வேண்டாம் வெளிநாட்டில் நடத்தலாம் என்று விஜய் முடிவெடுத்திருந்தார். ஆனால் இந்த ஒரு விஷயத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் வருகிற 30-ஆம் தேதி நடத்தலாம் என்று சம்மதத்தை கொடுத்தார்.

Also read: நாலா பக்கமும் சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை.. தில்லாக சமாளிக்க ரெடியான லியோ

இதை கேள்விப்பட்ட அனைத்து ரசிகர்களும் ஏகபோக சந்தோஷத்துடன் இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குள்ளே லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் ஆகிவிட்டது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் வெளியிட்டு விட்டார். இதனால் ரொம்பவே விரக்தியில் விஜய்யின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஆடியோ லான்ச் டிக்கெட் குறித்து தற்போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்திற்கு ப்ரீயாவே பாஸ் வழங்குவதுண்டு. அப்படி அவர்கள் வாங்கிய டிக்கெட்டை வெளியே அதிக காசுக்காக விற்கிறார்கள் என்று சினிமா விமர்சகர் மற்றும் வலைப்பேச்சு பேச்சாளர் பிஸ்மி அபாண்டமாக ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

Also read: இந்தியளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஆறு படங்கள்.. ஜெய்லர் முடியாததால் லியோவுக்கு நெருக்கடி

அந்த வகையில் விஜய் தரப்பிலிருந்து தக்க பதிலடி பிஸ்மிக்கு கொடுத்திருக்கிறார். அதாவது ஆடியோ லான்ச் டிக்கெட்டை வெளியில் விற்று தான் பிழைக்கணும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. அத்துடன் இதுவரை ஒரு பாஸ் கூட வழங்கவில்லை. அதற்குள் தேவையில்லாத கட்டுக்கதைகளும் கட்ட வேண்டாம் என்று நெத்தியடி பதில் கூறியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் எப்போதும் தேவையில்லாத விஷயங்களை உங்க இஷ்டத்துக்கு பரப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் இதுவரை யாருக்கும் லியோ ஆடியோ லான்ச்சுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also read: விஷ பூச்சிகள் வேலையால் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச்.. அதிர்ச்சியான உண்மை காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்