நாலா பக்கமும் சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை.. தில்லாக சமாளிக்க ரெடியான லியோ

Vijay-Leo: சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் லியோ இப்போது நாலா பக்கமும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆனது தான் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்கள் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருப்பினும் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை தில்லாக சமாளிக்க தயார் என்பது போல் லியோ அடுத்தடுத்த சம்பவத்திற்கு தயாராகி வருகிறது.

Also read: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ, பதிலடிக்கு தயாராகும் விஜய்.. மிரட்ட வரும் லியோ ட்ரெய்லர், எப்ப தெரியுமா?

அதன் படி இன்று செகண்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது. நேற்று இதன் அறிவிப்பு வெளிவந்த நிலையில் ரசிகர்களும் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். அதைத்தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் லியோ திருவிழாவாகத்தான் இருக்கும்.

அதன் முதற்கட்டமாக ட்ரெய்லர் ஆரவாரமாக வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் விஜய்யின் கேரள ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஆடியோ லான்ச் இல்லன்னா என்ன இங்க வாங்க என்று ஆதரவுகாரம் நீட்டி வருகின்றனர். இது படகுழுவுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் ஏற்கனவே மோகன்லால் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

Also read: குரங்குக்கு வாக்கப்பட்டா குட்டிக்கரணம் போட்டு தான் ஆகணும்.. மன்சூர் அலிகானால் படாத பாடுபடும் லோகேஷ்

அதனாலேயே இந்த எண்ணமும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் மாஸ்டர் படத்திற்கு நடந்தது போல் பெரிய நட்சத்திர ஹோட்டலில் இசை வெளியீட்டு விழாவை முக்கிய பிரபலங்களை வைத்து நடத்தலாம் என்ற ஒரு எண்ணமும் தயாரிப்பு தரப்புக்கு இருக்கிறது.

இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. இப்படி சுற்றி சுற்றி பிரச்சனையை சந்திக்கும் ஒரே நடிகர் விஜய்யாக தான் இருப்பார். ஆனாலும் லியோ மூலம் ஒட்டு மொத்த சர்ச்சைக்கும் பதிலடி கொடுக்க அவர் தயாராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சுயலாபத்திற்காக அரசியலில் குதித்த 5 ஹீரோக்கள்.. மண்டபத்தை இடித்ததால் கேப்டன் உருவாக்கிய வரலாறு

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -