வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஷ பூச்சிகள் வேலையால் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச்.. அதிர்ச்சியான உண்மை காரணம்

Thalapathy Vijay: தளபதி விஜய் நடித்த லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது இணையதளத்தில் மிகப்பெரிய பிரச்சனையையே கிளப்பி இருக்கிறது. செப்டம்பர் 30ஆம் தேதி ஆடியோ லான்ச் நடக்கும் என அறிவித்ததோடு, அதற்கான பாஸ் கொடுக்கும் வேலையும் தொடங்கிய பின் திடீரென நிறுத்தப்பட்டது தான் இதற்கு மிகப்பெரிய காரணம். இதனால் தான் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து இது நாங்களே எடுத்த முடிவு, எந்த அரசியல் காரணமும் இல்லை என பலமுறை சொல்லப்பட்டாலும், விஜய் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. முழுக்க முழுக்க அரசியல் காரணத்தால் தான் இப்படி நடந்து இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துக் கொண்டிருப்பதோடு ஆளும் கட்சிக்கு எதிராக ஹேஷ் டாக்கையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read:நேரம் பார்த்து சீண்டிப் பார்க்கும் சன் பிக்சர்ஸ் மாறன்.. ஜெயிலர் வீடியோ வெளியிட்டு பின் டெலிட் செய்த சம்பவம்

இதற்குக் காரணம் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ஒரு பக்கம் விஜய் அரசியலில் இறங்கப் போகிறார் என செய்திகள் வெளியாக ஆரம்பித்தது. அதற்கு ஏற்றது போல் நடிகர் விஜய்யின் தொடர் நடவடிக்கைகளும் இருந்ததால், அவர் அரசியலில் இறங்கி விடுவாரோ என்ற பயத்தில் தான் சூழ்ச்சி செய்து, பொதுமேடையில் அவரை பேச விடாமல் தடுப்பதற்காக ஆடியோ லாஞ்சை ரத்து செய்து இருக்கிறார்கள் என பேசப்படுகிறது.

ஆனால் உண்மை காரணம் இது கிடையாதாம். லியோ பட ஆடியோ லான்ச் நடந்தால், கண்டிப்பாக அதிக கூட்டம் சேரும் என்பதால் தான் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாஸ் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஸ் வேண்டும் என தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். யாருக்கு கொடுப்பது, கொடுக்கக் கூடாது என்பதில் பெரிய சிக்கல் இருந்திருக்கிறது.

Also Read:விஜய்யின் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தாரா உதயநிதி.? தளபதி தரப்பில் கூறும் 5 காரணங்கள்

மேலும் விநியோகிக்கப்பட்ட பாஸ்களை அப்படியே நகலெடுத்து, போலி பாஸ்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10,000 போலி டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். அந்த பாஸை நம்பி வாங்கியவர்கள் எல்லோரும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.

ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி விழாவின் பொழுது ஏற்பட்ட சிக்கல்கள் எல்லோருக்கும் தெரியும். மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தால் கண்டிப்பாக விஜய் பெயர் கெட்டுப் போவதோடு, சென்னையில் சட்டமூலங்கு பிரச்சனை அதிகமாகிவிடும். இதனால் தான் பட குழு தாமாக முன்வந்து விழாவினை ரத்து செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read:லியோ ஆடியோ லாஞ்சும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. வெறுத்துப் போய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பட குழு

- Advertisement -

Trending News