Connect with us
Cinemapettai

Cinemapettai

sharuk-khan-nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்த லேடி சூப்பர் ஸ்டார்.. நீங்க சொல்ற காரணமெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்திற்கும்  ரசிகர்களிடையே ஏகபோகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா, பாலிவுட் மெகா ஸ்டாரான ஷாருக் கானுடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதாவது 2013ஆம் ஆண்டு இந்திய திரையரங்குகளை மிரள விட்ட படம் தான் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. மேலும் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் தயாரான இந்தப் படம் 4.23 பில்லியன் வசூல் புரிந்தது.

nayanthara

nayanthara

இந்தப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை ரோஹித் ஷெட்டி அணுகினாராம். அதற்கு நயன்தாரா முடியவே முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டாராம்.

ஏனென்றால், நயன்தாராவை ரோஹித் ஷெட்டி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாராம். இதனால்தான் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவென்றால், அந்தப் பாடலை கொரியோகிராஃப் செய்தது நயன்தாராவின் முன்னாள் காதலரான பிரபுதேவா. மேலும்  நயன்தாரா இதை விரும்பாததால் படத்திலிருந்து நழுவி விட்டாராம்.

இதற்குப்பிறகு பிரியாமணி ‘1234’ பாடலுக்கு நடனமாடினார் என்பதும், இந்த பாடல் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top