தமிழ் சினிமாவின் 8 டாப் ஹீரோக்களின் 50வது படம்.. வெற்றியா தோல்வியா நீங்களே பாருங்க!

கோலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்திலேயே 50வது படத்தில் நடித்து வெற்றி, தோல்விகளை சந்தித்த ஹீரோக்களின் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.

எம் ஜி ராமச்சந்திரன்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 50வது திரைப்படம், 1961-இல் வெளியான நல்லவன் வாழ்வான். பி நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர், ராஜசுலோச்சனா நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் அந்த அளவுக்கு சரியாக போகவில்லை.

சிவாஜி கணேசன்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 50வது திரைப்படம் 1958-ல் வெளியான சாரங்கதாரா. இப்படம் தெலுங்கு நாடகத்தை தமிழில் எடுக்கப்பட்ட படம். இப்படம் ராஜராஜ நரேந்திரன் மகன் சாரங்கதாராவின் கதை. இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50வது திரைப்படம் தமிழில் இல்லை. தெலுங்கில் வெளியான டைகர் திரைப்படம். இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கமலஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் 50வது திரைப்படம் டைரக்டர் முத்துராமனின் மோகம் முப்பது வருஷம். இப்படம் மணியன் எழுதிய மோகம் முப்பது வருஷம் என்ற நாவலை படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் கமல் சுமித்ரா என பலரும் நடித்திருப்பார்கள். இத்திரைப்படம் வெற்றி பெற்றது.

விஜயகாந்த்: புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் 50வது திரைப்படம் 1985 இல் வெளியான நீதியின் மறுபக்கம். இப்படத்தின் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். இப்படத்தில் ராதிகா, வடிவுகரசி, விகே ராமசாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இசைஞானி இளையராஜா இப்படத்தில் இசை அமைத்திருப்பார்.

பிரபு: நடிகர்திலகத்தின் மகன் இளைய திலகம் பிரபு நடித்த திரைப்படம் பூ பூவா பூத்திருக்கு. இப்படத்தில் சரிதா, அமலா நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் டி ராஜேந்திரன்.1987 இல் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

விஜய்: தளபதி விஜய் அவர்களின் 50வது திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கிய சுறா. இத்திரைப்படத்தில் தமன்னா,வடிவேலு இப்படத்தில் உடன் நடித்திருப்பார்கள். இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.

vijay-ajith
vijay-ajith

அஜித்: தல அஜித்தின் 50வது திரைப்படம் வெங்கட்பிரபு இயக்கத்தில், தயாநிதி அழகிரி தயாரிப்பில் 2011இல் வெளியான மங்காத்தா. அஜித், திரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி, பிரேம்ஜி, மகத், வைபவ், ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்