சம்பள விஷயத்தில் கரார் காட்டும் பிரதீப்.. கழட்டிவிட்ட கமல்

Pradeep – kamal : கமல் தனது ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் இப்போது நிறைய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் என இளம் நடிகர்களின் படங்கள் கமலின் லயன் அப்பில் இருக்கிறது. அந்த வகையில் லவ் டுடே என்ற படத்தின் மூலம் ஒவர் நைட்டில் பேமஸ் ஆன பிரதீப்பின் படத்தையும் கமல் தயாரிக்க இருந்தார்.

கோமாளி படத்தின் மூலம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்று தான் கமல் பிரதீப்பின் படத்தை தயாரிக்க முன் வந்திருந்தார்.

ஆனால் பிரதீப் தன்னுடைய படத்திற்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கரார் காட்டி இருக்கிறார். ஒரு படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் இவ்வாறு கேட்பது கமலுக்கு நிரடலாக இருந்திருக்கிறது. கமல் பிரதீப்பை கழட்டி விட்டு விட்டார். ஆனால் இவர் கேட்ட சம்பளத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் ஒத்துக்கொண்டது.

Also Read : என்னது அந்த படம் காப்பியா.! உண்மையை ஓப்பனாக போட்டு உடைத்த கமல்

ஏனென்றால் லவ் டுடே படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் நல்ல லாபத்தை பார்த்திருந்தது. அதனால் பிரதீப் எவ்வளவு கேட்டாலும் கொட்டிக் கொடுக்க ஏஜிஎஸ் தயாராக இருந்தது. அதில் இப்போது என்ன ட்விஸ்ட் என்றால் பிரதீப் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் இப்போது 10 கோடி சம்பளம் கேட்கிறார்.

ஆகையால் சம்பளமே ஒரு பெரிய தொகையாக இருக்கும் என்பதால் ஏஜிஎஸ் நிறுவனம் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறது. மேலும் இப்போது விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிப்பதால் இந்த படத்தின் பட்ஜெட்டே பெரும் தொகையாக இருக்கிறது. ஆகையால் அடுத்ததாக பிரதீப் படத்தை எடுக்க சற்று தாமதமாக வாய்ப்பிருக்கிறது.

Also Read : விஜய் டிவி காலில் விழுந்து ஹோஸ்ட் ஆன கமல்.. எக்ஸ்பயரி முடிஞ்ச தாத்தா என அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பெண் சைக்கோ