ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய் டிவி காலில் விழுந்து ஹோஸ்ட் ஆன கமல்.. எக்ஸ்பயரி முடிஞ்ச தாத்தா என அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பெண் சைக்கோ

Kamal-Biggboss: கமல் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அவரை பிடிக்காத பலர் அவர் மீது விமர்சனங்களை வைத்தாலும் அதை எல்லாம் ஆண்டவர் காதில் வாங்குவது கிடையாது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் கமலை அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

அதாவது கடந்த சில நாட்களாகவே பாடகி சுசித்ரா பிக்பாஸ் பற்றிய தன்னுடைய கருத்துக்களை குறிப்பிட்டு வருகிறார். அதன்படி தற்போது ஒரு பேட்டியில் அவர் கமலை படுமோசமாக விமர்சித்துள்ளது கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதிலும் விஜய் டிவி காலில் விழுந்து தான் அவர் இந்த வாய்ப்பை வாங்கினார் என அவர் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் எக்ஸ்பையரி ஆன தாத்தா. அவருக்கு எதுக்கு பிக்பாஸ் ஷோ, அவரும் அவர் டிரெஸ்ஸும், ஷோவின் இமேஜையே கெடுக்கிறார் என பொரிந்து தள்ளியிருக்கிறார். மேலும் சிம்புவை கூப்பிடுங்க என எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவலை தரக்குறைவாக பேசி இருக்கிறார்.

Also read: என்னது பார்ட் 2 ஆ.! விசித்ரா போட்ட புது சபதம், கூட்டு சேர்ந்த அர்ச்சனா

அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் போது சுசித்ரா தனிப்பட்ட விரோதத்தை காட்டுகிறாரோ என தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவர் சைக்கோத்தனமாக தன்னுடைய கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். இதனால் கமலின் ரசிகர்கள் இப்போது செம காண்டில் இருக்கின்றனர்.

ஏற்கனவே சுசித்ரா மீது இருக்கும் சர்ச்சை கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதில் இப்போது கமலை சீண்டும் விதமாக பேசி புது வம்பில் சிக்கி இருக்கிறார். முன்னதாக மாயாவின் அந்தரங்க விஷயத்தை எல்லாம் இவர் அவிழ்த்து விட்டார். அது மட்டுமின்றி கமல் மாயாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆண்டவரை அவர் கோமாளி, தாத்தா என அசிங்கப்படுத்தி கமல் ரசிகர்கள் வாயில் விழுந்திருக்கிறார். இதன் மூலம் மைக்கை பிடித்தால் இஷ்டத்திற்கு உளறி கொட்டும் பிரபலங்களின் வரிசையில் சுசித்ராவும் இணைந்துள்ளார். இது இத்துடன் நிற்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read: ஆண்டவரையே கதற விட்ட பசுக்கள் கூட்டம்.. ஜிங்ஜாங் போடும் காளைகள், சுவாரசியமாகும் சீசன் 7

- Advertisement -

Trending News