கமலுக்குப் பிடித்த ரஜினி படம்.. அல்ப ஆசையை வெளிப்படுத்திய உலகநாயகன்

சினிமா துறையில் மிகவும் நாகரீகமான முறையில் நட்பு பாராட்டி வருவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ரஜினி-கமல். இருவரும் வளர்ந்து வந்த காலகட்டங்கள் ஒன்று என்றாலும் இவர்கள் தேர்ந்தெடுத்த கதைக்களங்கள் வெவ்வேறாகவே இருந்தது.

கமல் சினிமாவில் பல சோதனைகளை செய்து அதை சாதனையாக மாற்றுவார், சூப்பர் ஸ்டார் தனது ஸ்டைலை வைத்தே பல வெற்றி படங்களை கொடுத்தவர். சூப்பர் ஸ்டார் மக்களுக்கு என்ன தேவையோ அதை திரையில் அப்படியே வெளிப்படுத்தி விடுவார். கமல் அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதை அப்படியே திரையில் வெளிப்படுத்தி விடுவார். வெளிநாடுகளுக்கு சென்று பல வித்தைகளைக் கற்றுக் கொண்டு வருவார்.

என்னதான் ரஜினி கமர்சியல் நாயகன் என்றாலும் இன்றும் மனதை விட்டு நீங்காத நிறைய அழுத்தமான படங்களையும் கொடுத்துள்ளார். ‘புவனா ஒரு கேள்விகுறி’ ‘தப்பு தாளங்கள்’ ‘அவள் அப்படிதான்’ ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என அடுக்கி கொண்டே போகலாம்.

முள்ளும் மலரும்: கல்கி இதழில் ‘முள்ளும் மலரும்’ என்று வெளியான தொடர்கதையை மையமாக கொண்டு 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘முள்ளும் மலரும்’. இயக்குனர் மகேந்திரனின் திரைக்கதை, வசனம் , இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சரத் பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா நடித்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த திரைப்படத்தை பற்றி கமல் தற்போது ஒரு மேடையில் பேசியுள்ளார். ரஜினி நடித்த படங்களில் தனக்கு மிகவும் படம் என்று முள்ளும் மலரும் திரைப்படத்தை கூறியுள்ளார்.

மேலும் தற்போது உள்ள கதாநாயகர்களில் நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். விஜய் ஏற்கனவே அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்ட திருப்பாச்சி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -