உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கமலின் 6 படங்கள்.. இந்த மனுஷன் அடிச்சுக்க ஆளே இல்ல

தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்றே கமலை சொல்லலாம். தன்னுடைய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தன் நடிப்பின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கமல் நடித்த பல படங்கள் சாதனை புரிந்தாலும் அதில் சிறந்த ஆறு படங்களை பார்க்கலாம்.

மகாநதி: நடுத்தர குடும்பஸ்தனின் ஆசையைப் புரிந்துகொண்டு அவனை நம்பவைத்து ஏமாற்றும் படம் தான் மகாநதி. இப்படம் பார்க்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் தான் அந்த வேதனையை அனுபவிப்பது போன்று கதை அமைக்கப் பட்டிருக்கும். இப்படத்தில் கமலின் கிருஷ்ணா என்ற பெயரில் தொடங்கி எல்லா கதாபாத்திரங்களின் பேருமே நதிகளின் பெயராக இருக்கும்.

தேவர் மகன்: கமல், சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர்மகன். இப்படம் வெளியான போது சாதி வன்முறையை தூண்டுவதாக கமலை பலரும் விமர்சித்தனர். ஆனால் அரிவாளை விட படிப்புதான் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதை அப்போதே விதைத்திருந்தார் கமல். தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற படங்களில் தேவர் மகன் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தில் ஷங்கர் புதுமையான கிராபிக்ஸ்களை பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்தார். இந்தியன் படத்தில் கமல் 70 வயது முதியவர் சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடிக்க முதல் முறையாக பிராஸ்தடிக் மேக்கப் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திருந்தார். ஊழலுக்கு எதிரான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆளவந்தான்: ஆளவந்தான் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாம் உலக நாயகன் தான். ஆசியாவிலேயே முதன்முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமராவை பயன்படுத்திய படம் ஆளவந்தான். இப்படத்தில் விஜயகுமார், நந்தகுமார் என இரண்டு கதாபாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டி இருந்தார் கமல். குடும்பத்தில் ஏற்படும் வன்முறை குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பதுதான் ஆளவந்தான் கதை.

விருமாண்டி: விருமாண்டி படத்திலும் இயக்கம், கதை, வசனம், நடிப்பு தயாரிப்பு என அனைத்தும் கமல் தான். இப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்கள். ஒரு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளியை அவர் பார்வையில் இருந்து நடந்த சம்பவத்தை, ஆவணப் படம் எடுப்பதற்காக வரும் ரோகிணியிடம் கூறுகிறார். அதன் பிறகு இவருக்கு மரண தண்டனை தேவை இல்லை என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.

விஸ்வரூபம்: தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற உன்னதமான படம் விஸ்வரூபம். அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஸ்வரூபம் படமாக்கப்பட்டது. தீவிரவாதிகளின் நடவடிக்கைகளாலும் அவர்களின் செயற்பாடுகளாலும் ஏற்படும் விளைவுகளை வெளிப்படையாக காட்டி இருந்தார் கமல். ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூப படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்