சினேகனுக்கு இருக்கிற அறிவில 10% கூட ஆண்டவருக்கு இல்லையா.? பிரதீப்பிற்காக கொந்தளித்த பிரபலம்

Bigg Boss Season 7 Pradeep: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை அன்று ஆண்டவர் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார். இந்த முடிவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். அதிலும் ஒரே கட்சியில் இருந்தாலும் கூட பிரதீப்பிற்கு கமல் ரெட் கார்ட் கொடுத்தது நியாயம் இல்லை என சினேகன் கொந்தளித்து இருக்கிறார்.

இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கமலின் கொள்கை பிடித்து போனதால் அவருடைய கட்சியில் இருக்கும் சினேகன், ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்று ரன்னர் அப் ஆனார். சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் சினேகன், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்ததை குறித்து பரபரப்பான பேட்டியை அளித்திருக்கிறார்.

அதில், பிக் பாஸ் வீட்டில் பிரதீப் தவறாக பேசியதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கு. விளையாட்டில் ஒரு மனிதன் தடுமாறுவது இயல்பான சூழல்தான். அதிலும் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்த அன்றைய தினத்தில், எனக்குன்னு பேசுறதுக்கு யாருமே இல்ல என்ற ஏக்கம் அவருடைய முகத்தில் தெரிந்தது. வீட்டில் இருக்கும் எல்லா போட்டியாளர்களும் தனக்கு எதிராக திரும்பியதால் கூனிக்குறுகி கசக்கி போட்ட ஒரு உயிராய் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் பிரதீப்பின் நிலையை பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

Also Read: 34 நாட்களில் பிரதீப் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரெட் கார்டு கொடுத்தும் லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி

அந்த சமயம் பிரதீப்பை எல்லாரும் புறக்கணித்ததால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வருகிறார். அவரால் எதுவும் பேச முடியவில்லை, ஊரே சேர்ந்து ஒருத்தரை உதைத்து தள்ளி கீழே விழும் போது, அவர் எந்திரிக்க முடியாத மனநிலை அன்று பிரதீப்பிடம் பார்க்க முடிந்தது என்று சினேகன் சமீபத்திய பேட்டியில் கொந்தளித்து பேசினார்.

இவருடைய இந்த பேட்டியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சினேகனுக்கு இருக்கிற அறிவுல 10% கமலுக்கு இருந்திருந்தால் கூட பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்திருக்க மாட்டார். ஒருமுறை வார்னிங் செய்துவிட்டு, அடுத்த முறை இதே தவறை செய்திருந்தால் ரெட் கார்ட் கொடுத்திருக்கலாம். ஆனால் அதிரடியாக பிரதீப்பை வெளியேற்றியது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.

ஒருவேளை கமல் எல்லார்கிட்டயும் அசிங்கப்பட்டு இருக்க மாட்டாரோ என்னவோ! பிரதீப்பின் நிலை அவருக்கு புரியாமலே போய்விட்டது. அதிலும் கமலோடு கட்சியிலே இருந்தாலும் கூட பிரதீப்பிற்காக பேசுகிறதை பார்க்கும்போது இவருக்கு இருந்த அறிவு கூட ஆண்டவருக்கு இல்லாம போச்சே! என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Also Read: 7 நாட்களுக்கு மட்டும் அன்ன பாரதி வாங்கிய மொத்த சம்பளம்.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய விஜய் டிவி