வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

சக்தியிடம் பொட்டி பாம்பாக அடங்கிய ஜான்சி.. குணசேகரனை அலேக்கா தூக்கப் போகும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதைதான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஏற்ப தற்போது சுவாரஸ்யமான கதைகள் நகர்ந்து வருகிறது. அதாவது திருவிழாவில் குணசேகரன் ஏற்பாடு பண்ணின மாதிரி அனைத்து விஷயங்களும் நடந்து வருகிறது. அதே மாதிரி அப்பத்தா ஏற்பாடு பண்ண நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பொறுப்பாக ஜீவானந்தம் தற்போது வந்திருக்கிறார்.

அத்துடன் இதில் முதல் மரியாதை பொறுப்பேற்கும் குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி ஜீவானந்தம் அவருடைய நியாயமான கோபத்தை பழிதீர்க்க ஏற்பாடு பண்ணி இருக்கிறார். அதற்காக நாலா பக்கமும் குணசேகரனை நோட்டமிடுவதற்கு தோழர்களை செட் பண்ணி இருக்கிறார்.

இது தெரியாமல் குணசேகரன், அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தின் கதையை முடிப்பதற்காக ஏற்பாடு பண்ணி இருக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த திருவிழா நிகழ்ச்சி ரணகளமாக முடியப்போகிறது. இதற்கிடையில் யாரோ ஒருவர் பலிகாடாக மாட்ட போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. அத்துடன் ஜான்சி ராணி ஓவராக அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Also read: மாரிமுத்து இல்ல டிஆர்பியும் இல்ல இழுத்தடிக்கும் எதிர்நீச்சல்.. திக்கு திசை தெரியாமல் தடுமாறும் ஜீவானந்தம்

அதுவும் அண்ணன் அண்ணன் என்று குணசேகரனின் காலை பிடித்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி மற்ற மருமகள்களை சீண்டி பார்க்கிறார். இதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத சக்தி உக்கிரமான கோபத்துடன் ஜான்சி ராணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். அதன்பிறகு பொட்டி பாம்பாக வாயை மூடிக்கொண்டு ஜான்சி அமைதியாக இருக்கிறார்.

அடுத்ததாக ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். வழக்கம்போல் ஈஸ்வரி, ஜீவானந்த இடம் பேசும்பொழுது கண்ணீர் வடித்துக் கொண்டு சோகத்தை கொட்டுகிறார். அதாவது ஜீவானந்தம், ஈஸ்வரி நம்பிக்கை துரோகம் பண்ணி விட்டார் என்று நினைக்கிறார். ஆனால் ஈஸ்வரியோ என் மீது எந்த தவறும் இல்லை வெண்பாவிற்காக தான் நாங்கள் யோசித்து உங்களிடம் மறைத்தோம் என்கிறார்.

அத்துடன் இப்பொழுதும் உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு வெண்பாவிற்காக யோசித்துப் பாருங்கள். வெண்பாவிற்கு உங்களைத் தவிர தற்போது வேறு யாரும் இல்லை என்று ஜீவானந்தத்தை சாந்தப்படுத்த பார்க்கிறார். ஆனால் எதற்குமே அசராத ஜீவானந்தம் குணசேகரனின் கதையை முடிப்பதற்காக முயற்சி எடுக்கிறார். இதில் யார் யாருடைய பிளான் சக்சஸ் ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பங்காளிடம் மண்ணை கவ்விய மூர்த்தி.. ரணகளத்திலும் குதூகலமாக இருக்கும் செந்தில் மீனா

- Advertisement -spot_img

Trending News