பங்காளிடம் மண்ணை கவ்விய மூர்த்தி.. ரணகளத்திலும் குதூகலமாக இருக்கும் செந்தில் மீனா

Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 அப்பா மகன்களின் பாசங்களை வைத்து குடும்பத்துடன் பார்க்கும் படியாக கதை நகர்ந்து வருகிறது. இதில் மூர்த்தி, மகன்களிடம் கண்டிப்போடு இருக்கும் பொறுப்பான அப்பாவாக நடிக்கிறார். அந்த வகையில் பசங்களை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று ஹிட்லர் மாதிரி நடந்து கொள்கிறார்.

ஆனால் இவரிடம் இருந்து மூத்த மகனாக இருக்கும் சரவணன் மற்றும் செந்தில் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். தெரியாத்தனமாக எல்லா விஷயத்திலும் பலிகாடாக மாட்டுவது கடைசி மகன் கதிர் தான். அப்படித்தான் கடையின் கணக்கு வழக்குகளை பார்க்கும் பொழுது ஆயிரம் ரூபாய் கம்மியாகி இருக்கிறது. இதை செந்தில் தான் மீனாவுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பதற்காக எடுத்தார். ஆனால் இந்த காசை கதிர் தான் எடுத்திருப்பார் என்று மூர்த்தி அவரை வெளுத்து வாங்குகிறார்.

இந்த உண்மையை தம்பி அடி வாங்கும்போது கூட சொல்லவில்லை. அதன் பின் எதுவுமே நடக்காத மாதிரி மீனாவிடம் ரொமான்ஸில் புகுந்து விடுவார். இதனை அடுத்து மூர்த்தியின் பேத்திக்கு காது குத்தற நிகழ்ச்சியை ஊர் அறிய நடத்துவதற்கு எல்லாருக்கும் அழைப்பு கொடுக்கிறார். அப்பொழுது மூர்த்தியின் பங்காளியாக இருக்கும் முத்துவேலின் ஐம்பதாவது பிறந்த நாள் பங்க்ஷனை வைத்து யார் வீட்டிற்கு ஊர் மக்கள் வருகிறார்கள் என்பதை போட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்று சக்திவேல் சவால் விடுகிறார்.

Also read: குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்

அதே மாதிரி மறுநாள் நிகழ்ச்சிக்கு ஊர் மக்கள் அனைவரும் முத்துவேல் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே வருகிறார்கள். அந்த வகையில் பங்காளியிடம், மூர்த்தி தோற்றுப் போய் மண்ணை கவ்விக்கொண்டார். அடுத்து மூர்த்தி தோற்றுப் போனதால் இவரை சீண்டி பார்க்கிறார்கள் பங்காளி குடும்பத்தார்கள். அப்படி இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் ஆகுது.

உடனே மூர்த்தியை பார்த்து சக்திவேல் உனக்கு யாரும் வர மாட்டாங்க. நீ எப்போதுமே அனாதை தான் என்று அவருடைய உணர்ச்சியை பங்கப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். இதனால் வாயடைத்து போய் மூர்த்தி தலை குனிந்து நிற்கிறார் . ஆனால் இதை பார்த்த மகன்கள் சண்டை போடுகிறார்கள். அத்துடன் கதிர் அவர்களை அடிக்கவே போய் விடுகிறார்.

கடைசியில் இரு குடும்பத்திற்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது. இதனால் வருத்தத்துடன் மூர்த்தி இருக்கும்பொழுது ஆறுதலாக கோமதி பேசுகிறார். அப்பொழுது மூர்த்தி எனக்கு என்னுடைய குடும்பம் நீங்க எல்லாம் இருக்கும் பொழுது நான் எதற்கும் கவலைப்பட போவதில்லை. அது மட்டும் இல்லாமல் எனக்கு ஒரு பிரச்சனை என்றதும் என் மகன் கதிர் அவங்கள அடிக்க போய்விட்டான். அதுவே எனக்கு போதும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் கோபி.. சைடு கேப்பில் பாக்கியாவின் மகளுக்கு பாயாசத்தை போடும் சக்களத்தி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்