ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஜான்சியை விட 100 மடங்கு வில்லியாக வரும் ஜனனியின் புது உறவு.. குணசேகரனிடம் சொத்தை அபகரிக்கும் பிளான்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை தோற்கடித்து பெண்கள் சுதந்திரமாக ஜெயிக்கும் தருணத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது ஒரு பக்கமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் புதுப்புது கேரக்டர்கள் உள்ளே நுழைந்து வருகிறார்கள். அதுவும் அந்த கேரக்டர்கள் அனைத்தும் நெகட்டிவ் ஆகவும் குணசேகரனை விட அட்டூழியம் பண்ணும் கேரக்டராக தான் இருக்கிறார்கள்.

இதுல அந்த நான்கு பெண்களின் முன்னேற்றத்தை எப்படி பார்ப்பது என்று புரியாத புதிராக இருக்கிறது. அத்துடன் அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் என்ன ஆனார்கள் என்று தெரியாத அளவிற்கு கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் ஆதிரை, சாறுபாலா வீட்டிற்கு போனதோடு சரி, அந்த கதை என்னாச்சுன்னு தெரியவில்லை. அருணுக்கும் ஆதிரைக்கும் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்று சொன்ன விஷயத்திற்கு பிள்ளையார் சுழியை இன்னும் போடவில்லை.

அடுத்ததாக ஒரு வியாபார எலக்சனுக்கு சம்பந்தமே இல்லாத அளவிற்கு தெருத்தெருவாய் போய் ஓட்டு கேட்பது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. இப்படி கதையை சொதப்பிக்கொண்டு வருகிறார்கள். போதாக்குறைக்கு ஜனனி அப்பாவின் விட்டுப் போன உறவு முறையை காட்டும் விதமாக அந்த குடும்பத்தையும் கொண்டு வருகிறார்கள். இதில் மெய்யப்பன் குணசேகரன் வீட்டிற்கு வந்து பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது ரொம்பவே மோசமானவர்களாக தான் தெரிகிறார்கள்.

Also read: தெருத்தெருவாக போய் ஓட்டு கேட்கும் எதிர்நீச்சல் டீம்.. நாடாளுமன்றத் தேர்தலை மிஞ்சும் பரிதாபம்

தற்போது இவர்களை விட வில்லி கேரக்டருக்கு ஜனனியின் அப்பத்தாவாக டிகே கலா என்டரி ஆகி இருக்கிறார். இவர் கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாகவும், குருவி படத்தில் விஜய்யின் அம்மாவாகவும் நடித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் முதல் முறையாக சின்னத்திரையிலும் நுழைந்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய கேரக்டரும் வில்லியாகத்தான் இருக்கப் போகிறது.

ஜனனி ஆரம்பிக்கப் போகும் கம்பெனியில் வந்து பிரச்சனை பண்ணி அதை அபகரிக்க நினைக்கிறது மெய்யப்பன் குடும்பம். அந்த வகையில் மொத்த குடும்பமும் அந்த கம்பெனிக்குள் நுழைந்து பூஜை போட போகிறார்கள். இதை தட்டிக் கேட்க வந்த ஜனனி முதன் முதலாக அந்த குடும்பத்தை சந்திக்கப் போகிறார். அத்துடன் ஜனனியை பார்ப்பதற்காக நாச்சியப்பன் மற்றும் மனைவியும் மதுரைக்கு வருகிறார்கள்.

வந்த இடத்தில் குடும்பத்தை பார்த்த நாச்சியப்பன் அனைத்து உண்மைகளையும் ஜனனிக்கு சொல்லிவிட்டால் அடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று புதிய யுத்தியை ஜனனி ஃபாலோ பண்ண ஒரு வாய்ப்பா இருக்கும். இதற்கிடையில் எலக்சன் விஷயத்தில் குணசேகரனை ஜெயிக்க வைப்பதற்காக லட்ச லட்சமாக பணத்தை புடுங்குகிறார் ஜான்சி ராணி. அத்துடன் ஏற்கனவே குணசேகரனுக்கு கல்யாண மண்டபத்தை எழுதிக் கொடுத்ததையும் கமுக்கமாக அபகரித்து விடுவார்.

Also read: தன்னோட பொண்ண பழிகாடாகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் போட தயாரான ஈஸ்வரி

- Advertisement -spot_img

Trending News