குணசேகரன் வீட்டில் அவமானம் பட்டு நிற்கும் ஜனனியின் அம்மா.. நாச்சியப்பன் எடுத்த முடிவு சக்திக்கு கை கொடுக்குமா?

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தற்போது குணசேகரன் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் அதிகரிக்கும் வகையில் புது கூட்டணி ஆரம்பிக்க போகிறது. அதாவது நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்தை பார்த்ததும் அந்தப் பக்கம் சாய்ந்து விட்டார். இதனால் நிலைகுலைந்து போன ஜனனியின் அம்மாவிற்கு ஆறுதலாக நிற்கிறார் சக்தி.

அந்த வகையில் ஜனனி அம்மாவுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். ஆனால் ஜனனி அம்மாவிற்கு அங்க போவதற்கு நெருடலாக இருக்கிறது. காரணம் குணசேகரன் மற்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்ததனால். ஆனால் சக்தி விடாப்பிடியாக என்னை நீங்கள் ஒரு நல்ல மகனாக நினைத்துக் கொண்டு என்னுடன் வாருங்கள் என்று கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போகிறார்.

இதனால் வேறு வழி தெரியாமல் ஜனனி அம்மாவும் குணசேகரன் வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஆனால் இதை பார்த்த கரிகாலனும் ஜான்சி ராணியும் எந்த அளவிற்கு வத்தி வைக்க முடியுமோ அதை குணசேகரன் அம்மாவிடம் சரியாக செய்து விட்டார். இதனால் கொந்தளித்துப் போன குணசேகரனின் அம்மா நடு வீட்டில் அனைவரது முன்னாடியும் ஜனனி அம்மாவை வாய்க்கு வந்தபடி தரை குறைவாக பேசுகிறார்.

Also read: ஜனனியின் அப்பா எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி.. அப்பத்தாவிற்கு ஆப்பு வைக்க போகும் நாச்சியப்பன்

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சக்தி, அம்மா வாயை அடைக்கும் அளவிற்கு பதிலடி கொடுக்கிறார். அதாவது ஜனனி அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் விஷாலாட்சி. அதற்கு சக்தி ஒரேடியாக நானும் இந்த வீட்டை விட்டு போகிறேன் உனக்கு பரவாயில்லையா என்று கேட்கிறார். இதற்கு சரியான பதில் சொல்ல முடியாமல் அப்படியே வாய் அடைத்து போய்விடுகிறார்.

ஆனால் ஏதோ சக்தி பேச்சைக் கேட்டு குணசேகரன் அம்மா வேண்டுமென்றால் சும்மா இருக்கலாம், இந்த விஷயம் தெரிந்த பிறகு குணசேகரனும் கதிரும் எந்த அளவிற்கு குதிக்கப் போகிறார்கள் என்பதுதான் இருக்கிறது. இதற்கு பேசாமல் ஜனனி அம்மா வசுவின் அம்மா அப்பா கூடவே இருந்து இருக்கலாம்.

இதற்கு அடுத்து நாச்சியப்பன், அவருடைய குடும்பத்தின் பக்கம் போனதற்கான முக்கியமான காரணம் கண்டிப்பாக சக்தி மற்றும் ஜனனிக்கு அந்த கம்பெனியை மீட்டுக் கொடுப்பதற்காகத்தான். அந்த வகையில் நாச்சியப்பன் காய் நகர்த்தப் போகும் ஒவ்வொரு விஷயமும் ஜனனி சக்திக்கு கைகொடுக்குமா என்பதுதான் மீதமுள்ள கதையாக இருக்கப்போகிறது.

Also read: குணசேகரன் அப்பத்தாவிற்கு எதிராக வந்த ஜனனியின் அப்பத்தா.. குடும்பத்துடன் ஒட்டிக் கொள்ளும் போகும் நாச்சியப்பன்

- Advertisement -spot_img

Trending News