போற போக்க பாத்தா கரிகாலனுக்கு ஆதிரையை கட்டி வச்சிருவாங்க போல.. குணசேகரனிடம் தோற்கப் போகும் ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் மொத்த பரப்பரப்பையும் ஏற்படுத்தி வருகின்ற ஒரே சீரியல் அது எதிர்நீச்சல் தான். ஆதிரை ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று குணசேகரன் கண்ணில் மண்ணை தூவி விட்டு அந்த வீட்டில் உள்ள பெண்கள் தந்திரமாக ஏற்பாடுகளை செய்து வந்தார்கள்.

இதைத் தெரிந்த குணசேகரன் ரொம்பவே ஆர்பாட்டம் பண்ணி இனியும் நான் உயிரோட இருந்தால் நல்லா இருக்காது. என் மொத்த மானத்தையும் என் மனைவி மற்றும் அம்மா குழி தோண்டி புதைத்து விட்டார்கள். இதற்குப் பிறகும் நான் ஏன் உயிரோட இருக்க வேண்டும் என்று தற்கொலை செய்ய போய்விட்டார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

பிறகு ஒரு வழியாக அனைவரும் சேர்ந்து காப்பாற்றி விட்டார்கள். ஆனால் ஜான்சி ராணி, இந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால் உனக்கு எதிரி நான் தான் என்று குணசேகரனிடம் சொல்கிறார். இதனை அடுத்து ஜனனி, ஆதிரை கல்யாணத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் அனைத்தையும் பண்ணிய நிலையில் அருணுக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சக்தி தொடர்ந்து கௌதமுக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் எடுக்கவே இல்லை. பிறகு ஜனனி தொடர்ந்து போன் பண்ணிய நிலையில் கௌதம் கேட்டது அருண் இன்னும் அங்கே வரவில்லையா என்றுதான். இதை கேட்ட ஜனனி, வரவில்லையா என்று என்னிடம் கேட்கிறாய் நீ தானே கூட்டிட்டு வரணும் என்று சொல்கிறார்.

Also read: உச்சகட்ட அவமானத்தால் தற்கொலை முயற்சியில் குணசேகரன்.. டபுளா யோசிச்சு ஜனனி வச்சா பாரு ஆப்பு

ஆக மொத்தத்தில் இவங்க எதிர்பார்த்த படி அருண் வருவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுகிறது.
இதற்கிடையில் இவர்கள் எந்த கோவிலில் இருக்கிறார்கள் என்று குணசேகரன் மற்றும் அவர்களுடைய தம்பிக்கு தெரிந்து விட்டது. உடனே குணசேகரன், கரிகாலனை கூட்டிவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறார்.

இதற்கிடையில் அருணை, எஸ்கேஆர் அல்லது ஜீவானந்தம் தூக்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி மட்டும் நடந்திருந்தால் ஆதிரை திருமணம் கரிகாலனுடன் தான் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதில் யார் யாரிடம் தோற்று நிற்க போகிறார் என்பது மிகப் பெரிய ட்விஸ்ட்டாக இருக்கிறது.

Also read: குணசேகரனை மிரட்டும் ஜான்சி ராணி.. கரிகாலன் காதலை ஊத்தி மூடிய ஜனனி

- Advertisement -spot_img

Trending News