சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குணசேகரனை முட்டாள் ஆக்கிய ஜனனி.. பிளானை மோப்பம் பிடிக்கும் மல்லுவேட்டி மைனர் கதிர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய தொடராக இருக்கிறது. குணசேகரனை தோற்கடிப்பதற்காக ஜனனி கச்சிதமாக ஒவ்வொரு பிளானையும் செய்து வருகிறார். ஆனாலும் எப்படியோ இவருடைய பிளானில் ஒரு கசிவு ஏற்பட்டு அதை மோப்பம் பிடித்து விட்டார் இந்த நாடகத்தின் மல்லுவேட்டி மைனராக இருக்கும் கதிர்.

ஆனாலும் இதையெல்லாம் சமாளிக்கும் விதமாக ஜனனி கொடுத்த ஒவ்வொரு தெளிவான பதிலுக்கும் குணசேகரன் முட்டாளாக ஆனது தான் மிச்சம். கதிர் மட்டும் ஜனனி ஏதோ ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறார். அடுத்ததாக இந்த வீட்டில் சுயமாக இருந்து தன்னிச்சையாக யாரையும் நம்பாமல் இருக்க வேண்டும் என்று போராடிய மருமகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட விதமாக ஈஸ்வரிக்கு சம்பளம் வர இருக்கிறது.

Also read: மறுபடியும் ஏழரையை கூட்டிய முல்லையின் அம்மா.. கட்டன் ரைட்டா வெளியே போக சொன்ன கதிர்

இதை வாங்கும் சந்தோஷத்தில் ஜனனி ஈஸ்வரி ரேணுகா நந்தினி இவர்கள் அனைவரும் ஆனந்தத்தில் இருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் ரேணுகா மற்றும் நந்தினியும் இதே போல் சாதித்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அருண் மற்றும் சக்தி ஒரே இடத்தில் இருந்தார்கள் என்றால் கதிர் கண்டுபிடித்து விடுவார்.

அதனால் ஜனனி இதற்கும் சேர்த்து ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். அவரை ஒரே இடத்தில் தங்க வைக்காமல் ஒவ்வொரு நாளும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றி வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இவர்கள் போடும் திட்டம் தெரியாமல் குணசேகரன் மக்கு மாதிரி அனைத்தையும் நம்பி விட்டார். ஆனாலும் கதிர் எப்படியாவது ஜனனி திட்டத்தை தெரிந்து கொள்வதற்காக முயற்சி செய்கிறார்.

Also read: வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

ஜனனி இல்லாத நேரத்தில் அவருடைய ரூமுக்கு சென்று போனில் இவருடைய காண்டாக்ட் நம்பரை பார்க்கிறார். இதை பார்த்த ரேணுகா ஜனனி ரூமில் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க அங்கு வந்த ஜனனி உனக்கு அறிவே இல்லையா என்னுடைய அனுமதி இல்லாம என் போனை என்ன பண்ணிட்டு இருக்க அப்படின்னு சொல்லி கேட்கிறார்.

கதிர் போகிற வேகத்தை பார்த்தால் ஜனனி திட்டத்தை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்த மக்கு கதிரை விட ஜனனி ரொம்பவே புத்திசாலி என்பதால் இவரின் பிளான் பக்கத்தில் அவரால் நெருங்கவே முடியாது. அதே நேரத்தில் ஜனனி மற்றும் அந்த வீட்டின் மருமகள் குணசேகரனுக்கு எதிராக எடுத்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றி தான் கிடைக்கும். இன்னும் வருகிற எபிசோடுகளில் இதற்கான கதைகளை வைத்து பார்க்கலாம்.

Also read: 2வது முறை மிஸ் பண்ணாமல் கரம் பிடித்த யூடியூப்பர் இர்ஃபான்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

- Advertisement -

Trending News