மரத்தடியில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. வைரலாகும் ஜகமே தந்திரம் புதிய போஸ்டர்

jagame-thanthiram-cinemapettai
jagame-thanthiram-cinemapettai

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் இணையத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ரகிட ரகிட பாடல், புஜ்ஜி பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

உள்ளூர் டான் எப்படி உலக டானாக மாறுகிறார் என்பதுதான் கதையாம். முதலில் தியேட்டரில் வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் தற்போது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து தனுஷுக்கும் ஜகமே தந்திரம் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்திக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜகமே தந்திரம் படத்தின் எந்த ஒரு அறிவிப்புகளையும் தனுஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொள்வதில்லை.

இந்நிலையில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதால் அதற்கான புரமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் தனுஷ் எழுதி பாடிய நேத்து என்ற பாடல் வீடியோ நாளை வெளியாக இருப்பதாக ஒரு போஸ்டரை வெளியிட்டனர். பார்ப்பதற்கே செம கூலாக இருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

jagame-thandhiram-poster
jagame-thandhiram-poster
Advertisement Amazon Prime Banner