சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அப்பாவுக்கு மகள் தப்பாம பிறந்திருக்கு.. திருட்டுத்தனத்தில் கோபியை உரித்து வைத்திருக்கும் இனியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது குடும்பத்தை நடத்தும் முழு பொறுப்பையும் பாக்யா ஏற்றுள்ளார். அதற்காக இரவும் பகல் பாராமல் உழைத்து வருகிறார்.

இந்நிலையில் திருட்டுத்தனத்தில் கோபியை அப்படியே உரித்து வைத்துள்ளார் மகள் இனியா. அதாவது தனது சொந்த குடும்பத்திற்கு தெரியாமல் கோபி ராதிகாவுடன் உடன் பழகி வந்தார். அதேபோல் பாக்யாவின் கணவன் தான் நான் என்று சொல்லாமல் ராதிகாவுடன் திருட்டுத்தனமாக பழகி வந்தார்.

Also Read : டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

கடைசியில் எல்லா பொய்களும் அவிழ்ந்து ஒரு வழியாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்போது அதேபோல் திருட்டுத்தனமாக இனியா பள்ளியில் ஃபோனில் வீடியோ பார்த்துள்ளார். இதை ஆசிரியர் பார்த்து நாளை எல்லோரும் பெற்றோருடன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் வீட்டில் இந்த விஷயம் தெரிந்தால் பெரிதாகிவிடும் என்று தனது அப்பா கோபிக்கு ஃபோன் செய்து ஸ்கூலுக்கு வர சொல்லி உள்ளார். அதேபோல் கோபி வந்து பள்ளியில் பேசி உள்ளார். இது பாக்யா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பெரிய வருகிறது.

Also Read : பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி கதறவிட்ட ஆண்டவர்.. பறிக்கப்பட்ட வெற்றி, தரமான சம்பவம்

உடனே இனியாவின் பாட்டி இதை கண்டிக்கிறார். எல்லோருமே திட்டுவதால் வீட்டை விட்டு வெளியேறுகிறார் இனியா. அங்கு கோபி வந்தவுடன் வீட்டில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுவதாக இனியா கூறுகிறார். இதைக் கேட்டு கோபி இனியாவை அழைத்துக் கொண்டு பாக்யா வீட்டுக்குள் நுழைகிறார்.

எல்லோர் முன்னிலையிலும் அப்பா உடன் வர உனக்கு சம்மதமா என இனியாவிடம் கோபி கேட்கிறார். இனியாவும் இந்த வீட்டில் இருந்தால் டார்ச்சர் என நினைத்துக் கொண்டு கோபியுடன் செல்ல சம்மதிக்க உள்ளார். அங்கு மயூ கோபி உடன் பழகுவதை பார்த்த இனியா மிகுந்த எரிச்சல் அடைய உள்ளார். இதனால் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Also Read : யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், பஜாரியை அடித்து துரத்தும் பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்

- Advertisement -

Trending News