Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பாவின் உடல் நிலையால் பிகில் பட இந்திரஜா எடுத்த திடீர் முடிவு.. இணையத்தில் வட்டமிடும் புகைப்படம்

தந்தையின் உடல்நிலை காரணமாக மகள் இந்திரஜா முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

robo-shankar-indraja

பிகில் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இந்திரஜா சங்கர். இதைத்தொடர்ந்து கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் இந்திரஜா காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரோபோ சங்கர். பல நடிகர்கள் போல் மிமிக்கிரி செய்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் விஜய் டிவி இவரை கெட்டியாக பிடித்துக் கொண்டு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு கொடுத்து வந்தது.

Also Read : நிக்க கூட தெம்பில்லாத ரோபோ சங்கர்.. உண்மையை உடைத்த பிரபலம்

ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து டாப் நடிகர்களின் பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீரென உடல்நல பிரச்சனையால் மிகவும் மெலிந்து போய்விட்டார். அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தனர்.

ரோபோ சங்கரின் நலம் விரும்பி மற்றும் நண்பருமான போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இப்போது ரோபோ சங்கர் நலம் பெற்று வருவதாகவும் சில மாதங்களில் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என கூறியிருந்தார். இப்போது தந்தையின் உடல்நிலை காரணமாக மகள் இந்திரஜா முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

Also Read : அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிராங்ஸ்டர் ராகுல்.. ரோபோ சங்கர் போல் எடுத்த தவறான முடிவு

அதாவது இந்திரஜா விதவிதமான போட்டோ சூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். அதுமட்டுமின்றி தனது குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படத்தையும் அடிக்கடி வெளியிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் குலதெய்வக் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

பல காலமாகவே இந்திரஜா தனது முறை மாமன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதுவரை மௌனம் சாதித்த இந்திரஜா தற்போது ஆமாம் என்று ரசிகர்களுக்கு கமெண்ட் செய்துள்ளார். ஆகையால் விரைவில் திருமண தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

indraja

indraja

Also Read : பயில்வான் சொன்னது உண்மைதான் போல.. ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து உண்மையை உளறிய போஸ்

Continue Reading
To Top