தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இவர் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பே தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ஏற்றுக்கொண்டார். தற்போது தொடர்ந்து அவரது தொகுதியில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை முன் நின்று நடத்தி வருகிறார். இதனை எல்லாம் பார்க்கும்போது விரைவில் முழுநேர அரசியல்வாதியாக இறங்கி விடுவார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் உதயநிதி முதலில் தனது தொகுதியில் நல்ல பெயரை வாங்கி விட்டு அதன் பிறகு அடுத்தடுத்து எப்படி அரசியலில் வெற்றி பெறலாம் என்பதை பற்றி யோசிப்பார் என அரசியல் பிரமுகர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் திமுக ஆட்சி பிடித்துள்ளது என்பதால் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் கலைஞர் 98 பிறந்தநாளை திமுக அரசியல்வாதிகள் மற்றும் குடும்பத்தினர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவரது சமாதிக்கு சென்று பூ மாலை அணிவித்தனர். தற்போது அவரது பேரனான இன்பநிதி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் 4 தலைமுறைகளை கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இன்பநிதி ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.