24 வருட கொள்கையை தூக்கி எறிந்த இளையராஜா.. திக்குமுக்காடிப் போன கமல்ஹாசன்!

எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். அப்படி அவரின் இயக்கத்தில், வித்தியாசமான முயற்சியில் உருவான ஒரு திரைப்படம் தான் ஹேராம். இப்படம் கமல்ஹாசனின் கனவு திரைப்படங்களில் ஒன்றாகும்.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தில் சுப்பிரமணியன் என்ற பிரபல வயலின் மேதையை தான் கமல் முதலில் இசை அமைக்க வைத்தார். அவரும் கமலுக்காக இரண்டு, மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த பாடல்களை கேட்ட கமலுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் கமல் அவருடைய நண்பர் இளையராஜாவை தேடி சென்றுள்ளார். இளையராஜா, கமல் நடித்த பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் நாயகன், புன்னகை மன்னன் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது.

இதனால் தான் கமல் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இளையராஜா ஹேராம் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொதுவாக இளையராஜா மற்றவர்கள் இசையமைத்த பாடல்களுக்கு இசையமைக்க விரும்ப மாட்டார்.

அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விடுகிறார். ஆனால் கமல் வேறு வழியில்லாமல் இளையராஜாவிடம் வந்து கேட்டவுடன் அவரும் அதற்கு சம்மதித்து உள்ளார். நண்பனுக்காக தன்னுடைய நீண்ட நாள் கொள்கையை அவர் விட்டுக்கொடுத்து ஹே ராம் படத்திற்கு இசையமைத்தார்.

அதன்பிறகு படம் வெளியாகி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் நீ பார்த்த பார்வை என்ற பாடல் பயங்கர ஹிட் ஆனது. தற்போது இளையராஜா கமலுக்காக தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுத்து செய்த இந்த விஷயம் பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்